ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்தவர் பாலாஜி. அதனால்தான் அவர் ஆர்ஜே பாலாஜி என்ற அடையாளத்தை பெற்றார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பங்கேற்று கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவரது நான் ஸ்டாப் பேச்சு கேட்பவர்களை ரசிக்க வைத்தது. பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அவர் யுகேஜி என்ற படம் மூலம் கதாநாயகனாக மாறினார்.
ஆர் கே பாலாஜி நாயகனாக நடித்த முதல் படம் எல்கேஜி பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் பெற்ற நிலையில் தொடர்ந்து வீட்ல விசேஷம் ரன் பேபி ரன் சொர்க்கவாசல் சிங்கப்பூர் சலூன் நானும் ரவுடிதான் தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை அவர் பெற்றார். நடிகை நயன்தாரா அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் என்ற படத்தையும் ஆர்ஜே பாலாஜி இயக்கி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.
இப்போது அவர் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் 3வது முறையாக நடிகை திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மௌனம் பேசியதே ஆறு படங்களை தொடர்ந்து 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா திரிஷா இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
ஆர்ஜே பாலாஜி ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற நிலையில் அவர் தமிழில் நகைச்சுவை கலந்து கமெண்டரி கொடுப்பது ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. ஆனால் இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் வர்ணனை செய்யவில்லை. இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை செய்துள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது, வருஷத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடித்தது மார்ச் மாசத்தின் கடைசி, ஏப்ரல் மே மாதங்கள் தான். இந்த நேரத்தில் நான் எனக்கு பிடிச்ச வேலையை செய்வேன். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் கமெண்ட்டரியில் நான் வரமாட்டேன். நான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். இப்பொழுது ஒரு படத்தை இயக்கி அதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
அதனால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு பிரேக் விட்டுள்ளேன். நிச்சயம் அடுத்த சீசனில் நான் வருவேன். ஆனால் என்னை பார்ப்பவர்கள் அண்ணா நாளைக்கு வந்துருவீங்களா, நேற்று ஏன் வரல நாளைக்கு வருவீங்களா என்று கேட்கும்போது சந்தோசமாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் நடிகர் ஆர் கே பாலாஜி கூறியிருக்கிறார்.





