- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டைக்கு மட்டும்தான் சிங்கம் வீட்டை விட்டு வெளியே வருமா? அப்புறம் தூங்க போய்விடுமா? தரத்தை கத்துக்குங்க...

வேட்டைக்கு மட்டும்தான் சிங்கம் வீட்டை விட்டு வெளியே வருமா? அப்புறம் தூங்க போய்விடுமா? தரத்தை கத்துக்குங்க விஜய் – நடிகர் சரத்குமார் ஆவேசம்!

- Advertisement -

கடந்த 21ம் தேதி மதுரையில் தவெக கட்சியின் மாநில அளவிலான 2வது அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், பாரத பிரதமர் நரேந்திர மோடியை மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என அழைத்தும் பேசியிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த பாஜக நலத்திட்ட விழாவில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் பேசியதாவது, அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீங்கள் கொடை நாட்டிலே தெருவிலே நின்றுக்கொண்டு இருக்கும்போது மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லி இருப்பீர்களா? என்ன தவறு என்று கேட்கறீங்க?

- Advertisement -

இன்னிக்கு சொல்லி பாருங்கய்யா, புரட்சித் தலைவி அம்மாவை பார்த்து அவர்களை பார்த்து நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று சொன்னால் மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லிப் பாருங்கள். சொல்லிப் பாருங்களேன். சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமாம். வந்து தூங்கிடுமாம். சிங்கம் வேட்டைக்கு போவாராம். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே வருமாம்.

மத்த நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிங்கம் போய் தூங்கிடுமாம். அந்த மாதிரி சிங்கமாக இருக்கக் கூடாது. சிங்கம் என்றால் அது சிங்கமாக இருக்க வேண்டும். தூங்குகின்ற சிங்கமாக இருக்க கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், தன்மையற்று அவர் பேசியதால் நான் அவரை பற்றிப் பேசுகிறேன்.

- Advertisement -

இல்லை என்றால் நான் அவரை பற்றி நான் பேச மாட்டேன். நமது முதலமைச்சர் பற்றியும் அவர் பேசி இருக்கிறார். அங்கிள் என்று கூப்பிடுகிறார். அவரே தன்னை தாய் மாமன் என்கிறார். என்னையும் மாமா அங்கிள் தாத்தா என்று எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். பரவாயில்லை.ஆனால் தரம் என்று ஒன்று இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பிரதமரையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையும் பற்றி விமர்சிப்பது சரியல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக்கொள்ளுங்கள் விஜய் அவர்களே என்று நடிகர் சரத்குமார் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்