தமிழ் சினிமாவில் அரசியல் கட்சி ஆரம்பித்தும் அரசியல் கட்சிக்குள் வந்தும் காணாமல் போன நடிகர் நடிகைகள் பல பேர் இருக்கின்றனர். குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சமீபத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ள தவெக தலைவர் நடிகர் விஜய் ஆகியோரை தவிர்த்து பார்த்தால், இந்த காணாமல் போன பட்டியலில் பலர் இருக்கின்றனர்.
குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இலட்சிய திமுக தலைவர் இயக்குனர் டி ராஜேந்தர் சமத்துவ மக்கள் கட்சி நடிகர் சரத்குமார் நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் கருணாஸ் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் என பலபேரை சொல்லலாம்.
இதுதவிர அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்ட பல நடிகர்கள் நடிகைகள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் வருமானத்தை பொருத்து அந்த கட்சிகளில் நீடிப்பார்கள், அல்லது வேறு கட்சிகளுக்கு தாவி விடுவது வழக்கமாக நடந்து வருகிறது.
குறிப்பாக இதுபோல் அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளும் மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பார்கள். மற்றபடி அவர்கள் சினிமா ஷூட்டிங் போலவே, தேர்தல் களங்களுக்கும் வந்து செல்வதுதான் வழக்கம்.
இதற்கிடையே கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் சரத்குமார், பெரிய அளவில் அரசியலில் சாதிக்க முடியவில்லை. பல தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்த அவர் இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வருகிறார். நேற்று தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், பாஜக குறித்தும் பாஜக ஆட்சி குறித்தும் பல விமர்சனங்களை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறியிருப்பதாவது, பாசிசம் என்றால் என்னவென்றே விஜய்க்கு தெரியாது. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்கிற அளவுக்கு விஜய் ஒன்றும் இன்னும் வளர்ந்து விடவில்லை. அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் அரசியல் பாடம் கத்துக்கிட்டு என்ன பேசுகிறோம்? எதற்காக பேசுகிறோம் என்பதை புரிந்துகொண்டு கொள்கை ரீதியாக பேச வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.





