- Advertisement -
Homeபொழுதுபோக்குபில்லா இயக்குனரின் அடுத்த அசத்தலான திட்டம்... மீண்டும் இணையும் மூவர் கூட்டணி... விசில் போட தயாராகும்...

பில்லா இயக்குனரின் அடுத்த அசத்தலான திட்டம்… மீண்டும் இணையும் மூவர் கூட்டணி… விசில் போட தயாராகும் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களின் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் விஷ்ணுவர்தன். இவர் தற்போது மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளியை வைத்து நேசிப்பாயா என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த எக்ஸ் பி நிறுவனம்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறது. இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து வித்தியாசமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியான இதன் டீசரும் வரவேற்பை பெற்றது.

 

- Advertisement -

இதற்கு முன்னதாக அவர் ஷெர்ஷா என்னும் பாலிவுட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது. கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் எடுத்திருந்தார்.

 

ஆரம்பத்தில் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் தான் விஷ்ணுவர்தன். பிறகு பட்டியல் திரைப்படத்தை எடுத்தும் பலரது கவனத்தைக் கவர்ந்தார். இதன் பிறகு தான் அவர் அஜித்துடன் இணைந்தார். தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்திருந்த அஜித்தை வைத்து பில்லா படத்தை அவர் இயக்கி இருந்தார்.

 

பழைய பில்லா திரைப்படத்தின் கதையை அப்படியே எடுத்து, அதில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அஜித்தை மிகவும் ஸ்டைலிசாக காண்பித்து, யுவன் சங்கர் ராஜாவின் இசையை தெறிக்க விட்டு ஸ்மார்ட் ஆக படத்தை எடுத்து முடித்து இருந்தார் விஷ்ணுவர்தன். இந்த திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

 

அதன்பிறகு அஜித்துடன் இணைந்து அவர் ஆரம்பம் திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் தற்போது மீண்டும் அவர் அஜித்துடன் இணைய இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றபோது தொகுப்பாளர் இது குறித்து கேள்வி கேட்க, அஜித் – யுவன் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை எடுப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனை இணையத்தில் ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்