- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடிக்கும் படத்தின் கதை எனக்கு தெரியும்… அதில் நான் நடிப்பது அவர் கையில்தான் உள்ளது...

ரஜினி நடிக்கும் படத்தின் கதை எனக்கு தெரியும்… அதில் நான் நடிப்பது அவர் கையில்தான் உள்ளது – வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பதாக ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் உருவாகவில்லை. குறிப்பாக பைனான்ஸ் பிரச்னை என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே திடீரென கடந்த வாரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்ய உள்ளார் என்று கடந்த வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வீடியோ வெளியானது. இது ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அஸ்வத் மாரிமுத்து எச் வினோத் அருண்குமார் உள்ளிட்ட சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் திடீரென சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, என்னுடைய அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்குவதாக இருந்தது. ஒருநாள் அவர் எனக்கு போன் பண்ணி கொண்டே இருந்தார். நான் வேலையில் பிஸியாக இருந்ததால் போனை எடுக்கவில்லை. உடனே நேராக என் வீட்டுக்கே சிபி வந்து விட்டார்.

- Advertisement -

என்னிடம் அவர், சார் எனக்கு ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமாக சொன்னார். நானும் அதை புரிந்து கொண்டேன். என்னை வைத்து அவர் இயக்க இருந்த கதை வேறு. அது அப்படியே இருக்கிறது. நாங்கள் மீண்டும் விரைவில் இணைவோம்.ரஜினி சார் நடிக்கும் புதிய படத்தின் கதை வேறு. அது எனக்கு தெரியும். ஆனால் நான் சொல்ல மாட்டேன்.

ரஜினியை வைத்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நான் நடிப்பேனா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். நான் தயாரித்த படங்கள் எதுவும் இதுவரை பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. அந்தக் குறையை ராதிகா மேடம் நடிப்பில் நான் தயாரிக்கும் தாய்க்கிழவி படம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நான் நடிக்கப் போகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்