ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா அமீர் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிக்குமார். அவருடன் இருந்த மற்றொரு உதவி இயக்குனர் சமுத்திரக்கனி. இருவரும் இணைந்து சுப்ரமணியபுரம் நாடோடிகள் படத்தை உருவாக்கினர். சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க சுப்ரமணியபுரம் படத்தை சசிக்குமார் இயக்கினார். இதுதான் அவரது முதல் படம்.
அடுத்து சசிக்குமாரை நாயகனாக வைத்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய படம்தான் நாடோடிகள். இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. முதல் படத்தில் மிரட்டிய சசிக்குமார், 2வது படத்தில் நட்புக்காக செய்யும் தியாகங்களுக்காக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்த சசிக்குமார் இடையில் சில மோசமான தோல்வி படங்களிலும் நடித்தார். எனினும் அயோத்தி படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. குட்டிப்புலி சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் சசிக்குமாருக்கு பெரிய வெற்றியை தந்தன.
சசிக்குமாரை பொருத்த வரை நடிகர் என்ற பந்தா இல்லாதவர். அனைவரிடமும் சகஜமாக பேசி பழக கூடியவர். வழக்கமாக நடிகர்கள் காட்டும் அந்தவிதமாக அலட்டல் அவரிடம் சிறிதும் இருக்காது. ஒரு சகோதர பாசத்தில் நெருங்கிய நட்பில் உள்ளவராக தான் அவரது பழக்கம் வழக்கம் சினிமாவிலும் நிஜத்திலும் இருந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, எங்க ஊரில் யாரும் என்னிடம் வந்து என்கூட செல்பி எடுத்துக்கிறது இல்ல. அப்படி யாரும் என்கூட செல்பி எடுத்தால் அது வெளியூர் ஆள் என்று நான் புரிஞ்சுக்கிறேன்.
ரோட்டில் நடந்து சென்று கடைக்கு போவேன். சைக்கிளில் போவேன். வீட்டுக்கு வெளியே நிற்கிறேன். என்னை மாமா மச்சான்னு கூப்பிட்டு பேசுறாங்க, என்ன மாப்ளேன்னு கூப்பிட்டா சொல்லுங்க மாமா என்று இயல்பாக திரும்ப கூப்பிடுறேன். ஈகோ அகம்பாவம் எட்டிப் பார்க்க மாட்டேங்குது. இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று நடிகர் சசிகுமார் அந்த நேர்காணலில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.





