- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 இசையில் கோட்டை விட்டாரா அனிருத்... முன்னோட்ட வீடியோவில் சுத்தமாக எடுபடாத இசை என...

இந்தியன் 2 இசையில் கோட்டை விட்டாரா அனிருத்… முன்னோட்ட வீடியோவில் சுத்தமாக எடுபடாத இசை என ரசிகர்கள் கமெண்ட்… இது என்னடா ராக்ஸ்டாருக்கு வந்த சோதனை…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் யார் என்றால் அது நிச்சயம் அனிருத்தாகதான் இருக்க முடியும். ரஜினியின் 170 மற்றும் 171 வது திரைப்படம், கமல்ஹாசனின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இணையும் திரைப்படம், தெலுங்கில் என் டி ஆர் திரைப்படம் என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அவர் ஓடி வருகிறார்.

சமீபத்தில் அவரது இசையில் வெளியான ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலும் ஜெயிலர் திரைப்படத்தை இன்னொரு உயரத்திற்கு கொண்டு சென்றது அனிருத்தின் இசைதான் என்று கூறலாம். அந்த அளவுக்கு பின்னணி இசையில் வெளுத்து வாங்கிய அனிருத், படம் தொடங்கியது முதல் இறுதி வரை ரசிகர்களை ஒரே நேர்கோட்டில் பயணிக்கச் செய்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கருடன் முதல் முறையாக இணைந்து இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு தொடங்கிய ஷூட்டிங் பணிகள், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, சங்கர் – கமல்ஹாசன் இடையே மனஸ்தாபம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் நின்று போனது. நீதிமன்றம் வரை இதன் விவகாரம் சென்ற நிலையில், ஒரு வழியாக அனைத்திற்கும் சுபம் ஏற்பட்டு பணிகள் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக சங்கர் எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

- Advertisement -

மூன்றாம் பாகத்தில் நடிப்பதற்காக கமல் 40 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 படத்தின் முன்னோட்ட முன்னோட்ட வீடியோ நேற்று வெளியானது. ரசிகர்கள் பலரும் சேனாதிபதி கதாபாத்திரத்தை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அதை முதன்மைப்படுத்தும் விதமாக காட்சிகள் ஏதும் இடம் பெறாதது சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அது மட்டுமல்லாமல் கம் பேக் இந்தியன் என அனிருத் குரலில் இருக்கும் பாடலும் ரசிகர்களிடையே பெரிதாக கவரவில்லை. முதல் பாகத்தில், ஏ ஆர் ரகுமான் படம் முழுக்க ஒரு மேஜிக்கை செய்திருப்பார் என்றும், அந்தத் தாக்கம் இதில் இல்லவே இல்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.மேலும் முன்னோட்ட வீடியோவில், இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கான இசையை எடிட் செய்து பலரும் வெளியிட்டு வருகின்றனர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.ஓ ஆகிய திரைப்படங்களில் சங்கர் ஏ ஆர் ரகுமான் பணிபுரிந்ததும், அந்நியன் மற்றும் நண்பன் இரண்டு திரைப்படங்களில் மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் வேலை பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்