இயக்குனர் பாலா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் பரமன் என்ற பிரதான கேரக்டரிலும் நடித்திருந்தார். அவருடன் ஜெய்யும் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி வில்லனாக அறிமுகமாகி இருந்தார். ஸ்வாதி நாயகியாக அறிமுகமான படமும் இதுதான். கஞ்சா கருப்பு நடிப்பு இந்த படத்தில் பெரிய அளவில் வரவேற்பையும், கவனமும் பெற்றது. ஊருக்குள் ரவுடித்தனம் செய்யும் சசிக்குமார், ஜெய் குரூப் கடைசியில் வன்முறைக்கு பலியாவதுதான் சுப்ரமணியபுரம் படத்தின் கதை.
இந்த படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, சுப்ரமணியபுரம் 2ம் பாகம் எடுத்தா நான் நடிக்கறேன்னு நடிகர் ஜெய் சொன்னார். நீ எப்படீ நடிக்க முடியும். அந்த கதையில் நீ செத்துடுவியே, நான்தான் 2ம் பாகத்துல வருவேன் என்று சொன்னேன். நீங்க எப்படி வர முடியும், உங்களையும் படத்துல கொன்னுட்டாங்களே என்று ஜெய் கேட்டார்.
படத்துல நான் செத்த மாதிரி தான் காட்டவே இல்லையே. கடைசி சீன்ல ஆத்தோரமா அடிச்சு போட்டாங்க, நான் வந்தேன்ங்கற மாதியான சீன் கூட வெச்சிருந்தேன். அப்படி வர்ற மாதிரி ஒரு ஓபனிங் சீன் கூட படத்துல வைச்சிருந்தேன். ஆனால் சுப்ரமணியபுரம் ஒரு பாகமே போதும் என்று அதை கடைசியில் எடுத்து விட்டேன்.
சுப்ரமணியபுரம் படத்தை 2ம் பாகமாக எடுத்தால் பரமன் வர்றான். அதில் டும்கா மட்டும்தான் இருப்பான். கோவில் திருவிழா. காலில் அடிப்பட்டிருக்கும். கழுத்தில் பேண்டேஜ் சுத்திக்கிட்டு குச்சி ஊனிக்கொண்டு நடந்து வரும்போது, டும்கா என் காலில் விழுவது போல தான் காட்சி எடுத்திருந்தேன். அப்போ ஸ்டிக்கோட நான் வரும்போது ஸ்வாதி கல்யாணமாகி வேற ஒரு கணவரோடு இருப்பார்.
அப்போ அவங்க பேமிலி எல்லாம் திருவிழாவில் சாமி கும்பிட வருவாங்க, அப்போ என்னை பார்ப்பாங்க. அப்படித்தான் சுப்ரமணியபுரம் 2ம் பாகம் ஓபனிங் சீன் வைக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனா அப்புறம் அதை நான் செய்யலே. ஜெய்யை கொலை செஞ்சதுக்கு அப்புறம் நான் இருக்கேன். அப்போ 2ம் பாகத்துல நான்தான் ஹீரோ. ஆனால முதல் பாகமே போதும்ன்னு அதோட விட்டுட்டேன் என்று, நடிகர் சசிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





