- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் துவங்கிய கட்சியில் நான் சேரப் போகிறேனா? பரவும் தகவல்களுக்கு பதிலளித்த மாஜி கதாநாயகி...

நடிகர் விஜய் துவங்கிய கட்சியில் நான் சேரப் போகிறேனா? பரவும் தகவல்களுக்கு பதிலளித்த மாஜி கதாநாயகி நடிகை ரோஜா – ஆந்திரா மாஜி அமைச்சர் தமிழக அரசியலில் கால் பதிக்கிறாரா?

- Advertisement -

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில், 1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். வீரா, உழைப்பாளி போன்ற படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். செம்பருத்தி படத்தில் பிரசாந்த் ஜோடியாக, ரோஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணிதான். பல ஆண்டுகளாக ரோஜாவை காதலித்து, அவரையே ஆர்கே செல்வமணி திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை ரோஜா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற சில படங்களில் குடும்பப் பாங்கான தோற்றங்களில் நடித்திருக்கிறார். இந்து போன்ற படங்களில் கிளாமராகவும் நடித்திருக்கிறார். கவர்ச்சியாகவும், ஹோம்லியாகவும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ரோஜா நாயகியாக நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துவந்த அவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிவடைந்த பிறகு, தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் அரசியலில் குதித்தார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை, இளைஞர் மேம்பாடு மறறும் விளையாட்டு துறை அமைச்சராகவும் ரோஜா பதவி வகித்தார்.

ஆந்திராவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியான நகரி தொகுதியில் 2 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் நடப்பாண்டில் நடந்த ஆந்திரா மாநில தேர்தலில், நகரி தொகுதியில் 3வது முறையாக போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் தோற்றுப் போனார். இந்த தேர்தலில் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், நடிகை ரோஜா நடிகர் விஜய் தமிழகத்தில் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாகவும் அவருக்கு மகளிர் அணியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை ரோஜாவிடம் கேட்ட போது, அவர் இதற்கு விளக்கம் தந்துள்ளார்.

நடிகை ரோஜா கூறுகையில், இது தெலுங்கு தேசம் கட்சி செய்கிற பொய் பிரசாரம். நான் ஏன் விஜய் கட்சியில் இணைய வேண்டும். எனக்கு விஜய் அவ்வளவு நெருக்கம் கூட இல்லை. பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி துவங்கிய போதே அந்த கட்சியில் நான் சேரவில்லை. விஜய் கட்சியில் நான் ஏன் சேரப் போகிறேன். நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில்தான் நீடிப்பேன். வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்