- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார்ட் கேமரா சொன்னா நடிக்க தெரியும்… தலையில் ஏன் தூக்கி வெச்சு கொண்டாடறீங்க? - நடிகர்...

ஸ்டார்ட் கேமரா சொன்னா நடிக்க தெரியும்… தலையில் ஏன் தூக்கி வெச்சு கொண்டாடறீங்க? – நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஹீரோவாக மாறி இப்போது குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிக்கு நண்பராக நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான இட்லி கடை படத்திலும் சத்யராஜ் தொழிலதிபராக நடித்துள்ளார்.

பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவராகவும் திமுகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை காட்டிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நல்ல நடிப்பு கலைஞர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கட்டப்பா போன்ற கேரக்டரில் சத்யராஜை விட யார் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்திருக்காது.

- Advertisement -

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜூம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவரால் நட்சத்திர நடிகராக இமேஜ் பெற முடியவில்லை. எனினும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். சத்யராஜின் மகள் திவ்யா, சில மாதங்களுக்கு முன்புதான் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக ஆதரவாளரான சத்யராஜ் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து அவ்வப்போது மறைமுகமாக விமர்சித்து வருகிறார். கரூர் சம்பவத்தை பற்றி குறிப்பிடும் போது தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவர் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும் என எம்ஜிஆர் பாடலை பாடி விஜயை விமர்சனம் செய்திருந்தது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நடிகருக்கு எல்லாமே தெரியுமுன்னு நீங்க நினைக்காதீங்க. நடிக்க மட்டும்தான் தெரியும். இந்த சமூகத்தில் இருக்கிற மிகப்பெரிய தப்பு நடிகர்களை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு நினைக்கிறது. எங்களை ஏங்க தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறீங்க?

நாங்க சும்மா நடிப்போம். ஸ்டார்ட் கேமரா என்று சொன்னால் நடிப்போம். நாங்க ஒண்ணும் பெரியாரோ கார்ல் மார்க்ஸோ அம்பேத்கரோ இல்லை என்று நடிகர் சத்யராஜ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இப்ப தான்யா இந்த மனுஷன் ரொம்பவும் ஃபிராங்கா பேசியிருக்கார் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கும் சூடு வெச்சிட்டாரே என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்