- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 46 படத்தில் நடிக்கும் மமிதா பைஜூ, கீர்த்தி சுரேஷ் - இருவரில் யார் கதாநாயகி?...

சூர்யா 46 படத்தில் நடிக்கும் மமிதா பைஜூ, கீர்த்தி சுரேஷ் – இருவரில் யார் கதாநாயகி? குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் மமிதா பைஜூ. பிரேமலு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மமிதா பைஜூ இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு தங்கையாக அல்லது மகளாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர பிரதீப் ரங்கநாநாதன் விஷ்ணு விஷால் தனுஷ் படங்களிலும் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

பைரவா சர்கார் ரஜினி முருகன் ரெமோ சாமி 2 தொடரி நடிகையர் திலகம் என அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இதில் மறைந்த நடிகை சாவித்திரி தேவி பயோபிக் படமான நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி தேவி கேரக்டரில் நடித்து சிறந்த நடிகை தேசிய விருது பெற்றவர் கீர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, தனது 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் கரம் பிடித்தார். கோவாவில் நடந்த இந்த திருமணத்துக்கு நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றது இணையத்தில் பெரிய விமர்சனத்தை கிளப்பியது.

திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கீர்த்தி சுரேஷ் ஆர்வமாக இருந்து வருகிறார். இந்தியில் இயக்குனர் அட்லி தயாரிப்பில் தெறி படத்தின் ரீமேக் படமான பேபி ஜான் என்ற படம் வெளியானது. வருண் தவான் நாயகனாகவும் நாயகியாக கீர்த்தி சுரேஷூம் நடித்த நிலையில் இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் தயாரிப்பாளர் அட்லிக்கு பலத்த நஷ்டத்தை தந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். குறுகிய கால படைப்பாக இந்த படம் உருவாகிறது. மொத்தம் 2 ஷெட்யூல் என்ற நிலையில், இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இடையில் சென்று வெங்கி அட்லூரி இயக்கத்தில் அந்த படத்தின் ஒரு ஷெட்யூலை முடித்து விட்டு வருகிறார். பிறகு மீண்டும் வந்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அடுத்து வெங்கி அட்லூரி படத்தின் 2ம் ஷெட்யூலை நடித்து முடித்துத் தர உள்ளார்.

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்கிறார். இதற்கிடையே வெங்கி அட்லூரி படத்தில் மமிதா பைஜூ, கீர்த்தி சுரேஷ் இருவருமே நடிப்பதால், படத்தில் இருவருமே கதாநாயகிகளா? அல்லது மமிதா பைஜூதான் சூர்யாவுக்கு ஜோடியா, அல்லது கீர்த்தி சுரேஷ் ஜோடியா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் சூர்யாவுக்கு கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்