- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களை நீங்க முட்டாளாக்க முடியாது, நீங்க தான் ஏமாந்து போவீங்க - ஆந்திரா துணை முதல்வர்...

எங்களை நீங்க முட்டாளாக்க முடியாது, நீங்க தான் ஏமாந்து போவீங்க – ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாணுக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ஆரம்பத்தில் அறிமுகமாகி பிறகு நாயகனாக பல படங்களில் நடித்தவர் சத்யராஜ். இப்போது பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். பெரியார் கொள்கைகளை பின்பற்றி பகுத்தறிவு பேசி வரும் நடிகர் சத்யராஜ், திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். அவரது மகள் திவ்யா சத்யராஜ், திமுகவில் சமீபத்தில் இணைந்தார்.

கடந்த 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில் தமிழக பாஜக முக்கிய தலைவர்களும், பல அரசியல் தலைவர்களும் மடாதிபதிகளும் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.

- Advertisement -

அரசியல் கலந்த இந்த ஆன்மீக மாநாட்டுக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் இருந்தது. இயக்குனர் அமீர் உள்ள சிலர் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்டு சில விஷயங்களை பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது விழாவில் பெரியார் ஒளி விருது நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற நடிகர் சத்யராஜ் அந்த விழாவில் பேசும்போது, தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அப்போது நடிகர் சத்யராஜ் கூறியதாவது, கடவுள் பெயரில் அரசியல் செய்வதை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

- Advertisement -

நீங்கள் பெரியாரின் வழி வந்தவர்களை முட்டாளாக்க முடியாது. உங்கள் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் தமிழ்நாட்டில் ஓட்டு வங்கிக்காக மதத்தை பயன்படுத்துவது உங்களுக்கு தோல்வியைத் தரும். இது பகுத்தறிவு மிகுந்த திராவிட மண். எங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு எங்ககிட்ட நீங்க ஏமாந்துடாதீங்க.

முருகனுக்காக ஒரு விழா நடத்தி இவர்களை ஏமாற்றி விட்டோம் என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அப்படியே இருந்தாலும் முருகன் எங்க ஆளு. அவர் சைலன்டா இருந்துகிட்டே ஆப்பு வைத்து விடுவார். நீங்க அவர் பேர்ல எங்களுக்கு ஆப்பு வைக்கலாம்ன்னு பாக்குறீங்க. ஆனா அவர் உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார் என்று நடிகர் சத்யராஜ் கிண்டலாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்