- Advertisement -
Homeபொழுதுபோக்குஉனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே…? நடிகர் சந்தானத்தை கலாய்த்த காமெடி கிங் கவுண்டமணி - நடந்ததை...

உனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே…? நடிகர் சந்தானத்தை கலாய்த்த காமெடி கிங் கவுண்டமணி – நடந்ததை வெளிப்படையாக சொன்ன நடிகர் சந்தானம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நக்கல் நாயகன் யார் என்றால் அது காமெடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கவுண்டமணிதான். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் அறிமுகமானவர் கவுண்டமணி. தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் காளியண்ணன் டெய்லர் கேரக்டரில் நடிக்க வைத்தார் கே பாக்யராஜ்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் கவுண்டமணி. குறிப்பாக கடந்த 1980 – 90களில் கவுண்டமணி காமெடி படங்களில் பிரதானமாக பேசப்பட்டது. வைதேகி காத்திருந்தாள் இதயக்கோவில் சின்னக்கவுண்டர் கரகாட்டக்காரன் வாழ்க்கை சக்கரம் என பல படங்களில் கவுண்டமணி காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக கவுண்டமணி செந்தில் கூட்டணி காமெடி தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் ஏராளமான படங்களில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். அதிலும் கவுண்டமணி பேசும் கோமுட்டி தலையா போன்ற கிண்டலான டயலாக்குகள்தான் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன.

நடிகர் கவுண்டமணியை போலவே பின்னாளில் காமெடி டயலாக்குகளில் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் சந்தானம். அவரும் தனது படங்களில் மற்ற கேரக்டர்கள் பேசும் வார்த்தைகளை கலாய்த்துதான் காமெடி செய்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றார். லொள்ளுசபா நிகழ்ச்சியில் அப்படி பேசி பேசி நடித்துதான் அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, கவுண்டமணி அண்ணனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சினிமாவில் என்னுடைய ஃபர்ஸ்ட் இன்ஸ்பிரேஷன் அவர்தான். கவுண்டமணி சார் வீடும் என்னோடு வீடும் பக்கம் பக்கம் தான்.

எப்பவாவது நானும் அவரும் நேரில் பார்த்தால் பேசிக்குவோம். அவர் எல்லோரையும் மட்டமாக கலாய்த்துதான் பேசுவார். என்னையும் அப்படித்தான் பேசுவார். இப்போ இந்த படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்னு நான் சொன்னால், என்ன பண்றது? உனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே? போய் பண்ணு என்று தான் கிண்டலாக சொல்லுவார் என்று நடிகர் சந்தானம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்