- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ், இந்த விஷயத்தில் கலந்து கட்டி அடித்து தூள் கிளப்புகிறாரே? -...

புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ், இந்த விஷயத்தில் கலந்து கட்டி அடித்து தூள் கிளப்புகிறாரே? – கோடி கோடியா வருமானம் வரும்போது இதெல்லாம் ஒரு விஷயமா பாஸ்?

- Advertisement -

சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள், கேமராவுக்கு முன்பு மட்டுமே நடிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். நிஜ வாழ்க்கையிலும் நடிப்பவர்களாக தான் இருப்பார்கள். தங்களது இமேஜை நல்லவிதமாக காட்டிக்கொள்ள நேர்காணல்களிலும், மேடைகளிலும் வசனம் பேசி நடிப்பவர்கள், நிஜத்தில் அவர்களின் சுயரூபமே வேறு மாதிரி இருக்கும்.

ஆனால் சினிமாவில் நடிப்பதோடு சரி, நிஜ வாழ்க்கையில் நான் இப்படிதான் என யதார்த்தமாக இருக்கும் நடிகர்களும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தன்னை பற்றிய விமர்சனம் தவறாக இருந்தாலும் சரியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நிஜ வாழ்க்கையில் நடிக்க மறுப்பவர்கள். சினிமா என்பது என் தொழில், வாழ்க்கை அல்ல என்ற கொள்கையிலும் அவர்கள் வாழ்பவர்கள்.

- Advertisement -

நடிகர் சத்யராஜூக்கு புரட்சித் தமிழன் என்ற பட்டப் பெயர் உண்டு. ஆரம்பத்தில் வில்லனாக பல படங்களில் நடித்த அவர் பிறகு கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாறினார். கதாநாயகனாக அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. 1990களில் அவரும் ஒரு முன்னணி நாயகனாக வலம் வந்தார்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக சத்யராஜ், ஹீரோ இமேஜ் இழந்துவிட்டதால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நாயகன் அல்லது நாயகியின் அப்பாவாக நடிக்கிறார். சில படங்களில் போலீஸ் அதிகாரி, டாக்டர், அரசு அதிகாரி, அரசியல்வாதி அல்லது இரட்டை நாயகர்களில் ஒருவர் போன்ற கேரக்டர்களில் நடிக்கிறார்.

- Advertisement -

சத்யராஜை பொருத்த வரை கடவுள் மறுப்பாளராக பேசுவார். ஆனால் சினிமாவில் பக்திமானாக நடிப்பார். தமிழ்தான் முக்கியம் என்பார். ஆனால் பிற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமே தெரிந்த அவர் இந்தி தெலுங்கு கன்னடம் என பிறமொழிகளில் நடிக்கும் வாய்ப்பை தவற விடுவதே இல்லை.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இந்தியில், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அதே போல் தெலுங்கில் துணை முதல்வர் பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மொழி எதுவாக இருந்தால் என்ன, கணிசமான வருமானம் முக்கியம் என்ற நிலைக்கு புரட்சித் தமிழன் சத்யராஜ் எப்போதோ வந்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்