- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கேரக்டர் ரோலில் நடிக்க அதுதான் காரணம், இதுல டூப் அடிக்க விரும்பவில்லை -...

நான் கேரக்டர் ரோலில் நடிக்க அதுதான் காரணம், இதுல டூப் அடிக்க விரும்பவில்லை – உண்மையை பச்சையாக சொன்ன நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் மாறுபட்ட ஒரு கலைஞராக இருப்பவர். வழக்கமாக ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு இமேஜ் ஏற்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் நிலையில், எந்த இமேஜூம் இல்லாமல் ஒரு கலைஞனாக மட்டுமே தன் திறமையை வெளிப்படுத்தி அதில் ஜெயித்துக் காட்டியவர்.

முன்னணி ஹீரோவாக பல படங்களில் நடித்த ஒரு மாஸ் நடிகர், அமைதிப்படை படத்தில் தேங்காய் பொறுக்கும் ஒரு கேரக்டரில் கிழிந்த பனியனுடன் நடிப்பது எல்லாம் பெரும்பாலும் பலரும் தவிர்க்க நினைக்கும் ஒரு கேரக்டர்தான். ஆனால் சத்யராஜ் அப்படிப்பட்ட கேரக்டரிலும் தனது தனிமுத்திரையை பதித்து வெற்றி கண்டவர்.

- Advertisement -

துவக்கத்தில் வில்லனாக அறிமுகமாகி ரஜினி, கமல் படங்களில் பெண்களை கற்பழிக்கும் கொடூர வில்லனாக நடித்து பிறகு, கடலோர கவிதைகள் படம் மூலம் நாயகனாக மாறியவர். ஹீரோவாக சத்யராஜ் நடித்த படங்களும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் சத்யராஜ், ஹீரோ நடிப்பில் இருந்த விலகி கேரக்டர் ரோல் செய்ய ஆரம்பித்தார். அப்பா, அண்ணன், போலீஸ் அதிகாரி, டாக்டர் போன்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்னும் ஹீரோவாக நடிக்கும் தோற்றப் பொலிவு இருந்தும் அவர் குணச்சித்திர நடிகராக மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்தது. எனினும் கேரக்டர் ரோலிலும் சத்யராஜ் ஜெயித்துக் காட்டினார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, உண்மையை சொல்ல எப்போதுமே நான் தயங்கவில்லை. நடிகைகளுடன் டூயட் பாடி போரடித்து விட்டது. அதனால் கேரக்டர் ரோலுக்கு மாறிட்டேன் என்று சொன்னால் அது டூப்பு. கடைசியாக 10 ஆண்டுகள் நான் ஹீரோவாக நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. படம் பிஸினஸ் சரியாக நடக்கவில்லை. அப்படியே பிஸினஸ் கீழே இறங்கி விட்டது.

அப்போது எனக்கு நல்ல சம்பளம் தந்து, கேரக்டர் ரோல் நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள். ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் ஹீரோதான் பொறுப்பு. ஆனால் கேரக்டர் ரோல் அப்படி இல்லை. நிறைய பேர் கேட்கறாங்க. அதனால் கேரக்டர் ரோலில் நடிக்க முடிவு செய்தேன். அப்போது புதிய நடிகர்கள் வரவும் இருந்தது. விஜய், அஜீத்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ் என்று நிறைய பேர் வந்துவிட்டனர். பிறகுதான் கேரக்டர் ரோல்தான் நமக்கு சரி என்று நடிக்க ஆரம்பித்தேன் என நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்