- Advertisement -
Homeபொழுதுபோக்குமோடி பயோபிக் படத்தை இந்த இயக்குனர்கள் எடுத்தால்தான் நன்றாக இருக்கும்... என்ன இப்படி சொல்லிட்டாரு சத்யராஜ்...

மோடி பயோபிக் படத்தை இந்த இயக்குனர்கள் எடுத்தால்தான் நன்றாக இருக்கும்… என்ன இப்படி சொல்லிட்டாரு சத்யராஜ்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரங்களை எடுத்தாலும் அதற்கு கச்சிதமாய் பொருந்தக் கூடியவர் நடிகர் சத்யராஜ். எண்பதுகளில் தொட்டு திரை உலகிற்கு வந்த அவர் முதலில், வில்லனாக தனது கேரியரை தொடங்கினார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சத்யராஜ், கதாநாயகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

 

- Advertisement -

இதற்குப் பெரிதும் உதவியது கடலோரக் கவிதைகள் திரைப்படம். தொடர்ந்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட சத்யராஜ், அதன் மூலம் பல்வேறு வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். சரியாக காலம் வரும் போது தனக்கேத்த கேரக்டருக்கும் அவர் மாற்றிக் கொண்டார்.

 

- Advertisement -

தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் பூந்து விளையாடி வரும் சத்யராஜ், எந்த ஒரு முக்கியமான ரோலையும் விடுவதில்லை. விட்டு வைப்பதில்லை என்று கூட சொல்லலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில், சிவனாண்டியாக நடித்து இறுதியில் நம்மை சிரிக்க வைத்த அவர், பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவாக வாழ்ந்தார்.

 

இந்த நிலையில் தற்போது அவர் மழை பிடிக்காத மனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, விஜய் மில்டன் இயக்கியுள்ளார். கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் மில்டனின் முந்தைய திரைப்படங்களாகும்.

 

இந்த திரைப்படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியிட்டு விழாவில் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் திரைப்படத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

 

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சத்யராஜ், மோடியின் பயோபிக் திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கினால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் இப்போது இல்லை. பா ரஞ்சித், மாரி செல்வராஜ் அல்லது வெற்றிமாறன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் மோடியின் பயோபிக் படத்தை எடுக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் உண்மையை கூறுவார்கள். நான் பயோபிக் படத்தில் எல்லாம் நடிக்கவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிப்பதையும் அவர் உறுதி செய்தார்.

- Advertisement -

சற்று முன்