- Advertisement -
Homeபொழுதுபோக்கு5000 மரங்கள் அது தரும் பழங்கள் பூக்கள் நறுமணம் பறவைகளுடன் அவர் நினைவில் வாழ்வேன் -...

5000 மரங்கள் அது தரும் பழங்கள் பூக்கள் நறுமணம் பறவைகளுடன் அவர் நினைவில் வாழ்வேன் – நடிகர் ஷயாஜி ஷிண்டே உருக்கம்!

- Advertisement -

பாரதி வேட்டைக்காரன் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ஷயாஜி ஷிண்டே. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஷயாஜி ஷிண்டே கூறியிருப்பதாவது. என் அம்மா மறைவதற்கு முன் ஒரு நாள் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். என் அம்மா மறைந்த பிறகு அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன். இப்போது அங்கு 5000 மரங்கள் வளர்ந்து இருக்கின்றன. அந்த மரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள் நறுமணம் மற்றும் பறவைகளுடன் இருக்கும் வரை நான் என் அம்மாவுடன் இந்த மரங்களின் நடுவே வாழ்வேன் என்று ஷயாஜி ஷிண்டே உருக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்