- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு வயசாகி போச்சு… படத்தில் நடிக்க வாய்ப்பில்லே… எனக்கு பாலோயர்ஸ் இல்லே… வீடியோவில் புலம்பிய கோமாளி...

எனக்கு வயசாகி போச்சு… படத்தில் நடிக்க வாய்ப்பில்லே… எனக்கு பாலோயர்ஸ் இல்லே… வீடியோவில் புலம்பிய கோமாளி பட நடிகர்!

- Advertisement -

முன்பெல்லாம் மிக அதிகளவில் வாரிசு நடிகர்கள் நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தனர். அதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்தவர்கள் அவர்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அந்த அனுபவம் காரணமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். ஆனால் இப்போது நிலமை வேறு மாதிரி மாறிவிட்டது.

இன்ஸ்டாகிராம் யூடியூப் எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பலர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இது காலத்தின் கோலம் என்றாலும் அவர்கள் சிறந்த நடிகர்களா நடிகைகளாக என்பதற்கு அவர்களது திறமைதான் பதில் சொல்ல வேண்டும். இதில் நடிப்பு அரக்கன் என்று தனக்கு தானே பெருமையாக சொல்லும் வாட்டர்மெலன் திவாகர் போன்றவர்களும் களத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்தவர் ஷாரா. மாநகரம் கோமாளி மீசைய முறுக்கு நான் சிரித்தால் ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் அதர்வா நடித்த தணல் என்ற படத்திலும் ஷாரா நடித்திருந்தார். ஆனால் நல்ல நடிகராக ரசிகர்களின் கவனம் பெற்ற அவரை பல படங்களில் தொடர்ந்து பார்க்க முடியவில்லை

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷாரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷாரா கூறியிருப்பதாவது, காலை 4 மணிக்கு தூக்கம் வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். இப்போது படம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்று தான் கேட்கிறார்கள்.

- Advertisement -

அதை பார்த்து தான் படத்தில் நடிக்க சம்பளம் பேசுகிறார்கள். இன்ஸ்டா பாலோயர்ஸ் அதிகரிக்க என்னிடம் எந்த தகுதியும் இல்லையே? எனக்கு கூந்தல் கிடையாது. மொழு மொழு என்று கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி வளர்ந்து அதுவும் நரைத்து போய் உள்ளது. எனக்கு ரீல்ஸ்ஸ் பண்ணவும் பிடிக்காது.

என்ன செய்து இன்ஸ்டாவில் பாலோயர்ஸ்சை அதிகரிப்பது என்று தெரியாமல் தூக்கம் வராமல் தவிக்கிறேன். தியானம் செய்தால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என்றால் அது செய்தாலும் எதுவும் தோணவில்லை. நான் என்ன செய்வேன்? ஏதாவது ஐடியா இருந்தால் கீழே கமெண்டில் சொல்லுங்கள் என்று அந்த வீடியோவில் ஷா ரா வேதனையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்