- Advertisement -
மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் முகேஷ் அம்பானி மகன் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மற்றும் ஜக்கி வாசுதேவ் உடன் சந்திப்பின்போது மேடையில் இருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை அமைதியாக இருக்கும்படி ஆனந்த் அம்பானி கேட்டுக் கொண்டதாக வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய சமூக வலைதள பிரபலம் சுவிக்யா சர்மாவுக்கு நடிகர் ஷாருக்கான் சட்ட நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். திரிக்கப்பட்ட தலைப்புகளுடன் கூடிய அந்த கருத்து முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது. எனவே சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணக்கிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





