- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் - மீண்டும் ரஜினியுடன் நடித்த அனுபவம்,...

ஜெயிலர் 2 படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் – மீண்டும் ரஜினியுடன் நடித்த அனுபவம், தனது கேரக்டர் குறித்து அப்டேட் தந்த சிவாண்ணா!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இப்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிற 15ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஜெயிலர் படத்தை விட பலமடங்கு ஹைப் காட்சிகளுடன் ஜெயிலர் 2 படம் உருவாகி உள்ளது. இதில் பிரதான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார்.

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெறுவது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த படம் என்ற பெருமையை சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இப்போது ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறுகையில், சிறப்பு மிக்க கேரக்டர்களுடன் இயக்குனர்கள் என்னை அணுகுவது என்னுடைய அதிர்ஷ்டம்தான். இந்த முறை ஜெயிலர் 2 படத்தில் எனக்கு கூடுதலான காட்சிகள் இருக்கின்றன.

டைரக்டர் என்னுடைய கேரக்டரை பயன்படுத்திய விதம் திரையில் மிகவும் சுவாரசியமாக இருக்கும். ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதால் அவருடன் நேரத்தை செலவிடுவதை நாம் மிகவும் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

வருகிற 15ம் தேதி திரைக்கு வரும் ஜெயிலர் 2 படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு மிர்ணா மேனன் மிதுன் சக்ரவர்த்தி யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஜெயிலர் 2 படம் டிக்கெட் முன்பதிவு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

சற்று முன்