- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகும் முதல் பாடலுக்கு இப்படி ஒரு தலைப்பா... இது உண்மையிலேயே...

குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகும் முதல் பாடலுக்கு இப்படி ஒரு தலைப்பா… இது உண்மையிலேயே ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி ஆட்டம்தான் போங்க….

- Advertisement -

அஜித்குமார் நடிப்பில் தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியில் மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் திரிஷா பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை பெரியளவு கவராத நிலையில் பலரது எதிர்பார்ப்பும் தற்போது குட் பேட் அக்லி மீது திரும்பி உள்ளது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் அஜித்தின் லுக்கும், அவரது மேனரிசமும் வேறு லெவலில் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதனை நிரூபிக்கும் வகையிலேயே இதன் போஸ்டரும் டீசரும் அமைந்தது.

- Advertisement -

மிக முக்கியமாக இந்த திரைப்படத்தின் டீசரை கூறலாம். படத்தில் முழுக்க முழுக்க அஜித்தான் பிரதானம் என்பதை டீசர் மூலமாகவே விளக்கி இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த டீசரில் குட் பேட் அட்லி அஜித்குமார் மட்டுமின்றி, பில்லா வாலி ரெட் அமர்க்களம் படங்களின் அஜித்குமாரின் ரெபரன்ஸ்களும் இடம்பெற்று இருந்தன.

அந்த பழைய திரைப்படங்களின் வாயிலாக அஜித்தின் மேனரிசங்களை ஆதிக் ரவிச்சந்திரன் காட்டி இருந்தார். இதன் மூலம் ஒரு விண்டேஜ் அஜித்குமாரை பார்க்க முடிவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் அஜித்குமார் ‘அது’ என்று வசனம் கூறுவது பலருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

- Advertisement -

மைத்திரி மூவிஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தில் திரிஷா ரம்யா எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். அதுபோக சிம்ரன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறாராம். அது சுல்தானா பாடல் தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அர்ஜுன் தாஸ் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறாராம். பிரசன்னா அஜித்குமார் கேங்கில் ஒருவராக வருவதாக சொல்லப்படுகிறது. வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில், படத்தில் இருந்து முதல் பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஓஜி சம்பவம் என இந்த திரைப்படத்தின் பாடல் தொடங்குகிறதாம். இதைக் கேட்டதும் ஆடிப் போய் இருக்கும் அஜித் ரசிகர்கள், ஆதிக் ரவிச்சந்திரனின் மேஜிக்கை காண காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்