- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் விஜயை தாக்கிப் பேசினாரா கன்னட நடிகர் சிவராஜ்குமார் - ரஜினிக்கு...

அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் விஜயை தாக்கிப் பேசினாரா கன்னட நடிகர் சிவராஜ்குமார் – ரஜினிக்கு நண்பர் என்பதால் அப்படி சொன்னாரா?

- Advertisement -

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். நடிகர் உபேந்திராவுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்த 45 – தி மூவி என்ற படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் விஜயகாந்த் விஜய் சரத்குமார் போன்ற பலரும் அரசியலுக்கு வந்து விட்டனர். கன்னட சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நீங்கள் இன்னும் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

இதற்கு பதிலளித்து நடிகர் சிவராஜ் குமார் கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் இப்போது உள்ள இந்த நிலையிலேயே நல்லது செய்துகொண்டு தான் இருக்கிறேன். என்னால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்கு செய்கிறேன்.

அரசியலுக்கு வந்தால் இவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்றால் அதில் ஒரு பாரபட்சம், கட்டுப்பாடு இருக்கும். ஆனால் நான் இப்போது விரும்பியவர்களுக்கு என்னால் உதவிகளை செய்ய முடியும். அரசியலில் அது முடியாது. ஏனென்றால் இப்போது நான் செய்யும் உதவிகள் இது என்னுடைய சொந்த பணம். என் உழைப்பில், வருமானத்தில் வந்த பணம் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் தவெக தலைவர் நடிகர் விஜய், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார். அதனால் அவரது கருத்தை சிவராஜ்குமார் மறைமுகமாக தாக்கிப் பேசியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவரது அப்பா ராஜ்குமார் என ராஜ்குமார் குடும்பம் சார்ந்த அனைவருமே நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படத்திலும் நடித்திருக்கிறார். அதனால் ரஜினி தனது நெருங்கிய நண்பர் என்பதால் விஜய்க்கு எதிரான ஒரு கருத்தை அவர் கூறியிருப்பதாகவும் பலர் சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்