- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனிடம் சிவகார்த்திகேயன் வைத்த ரெக்யூவஸ்ட், கதவை சாத்திக்கொண்ட உலக நாயகன், என்னன்னு தெரியுமா?

கமல்ஹாசனிடம் சிவகார்த்திகேயன் வைத்த ரெக்யூவஸ்ட், கதவை சாத்திக்கொண்ட உலக நாயகன், என்னன்னு தெரியுமா?

- Advertisement -

சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள நிலையில் வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் இதில் சரிதா, மோனிஷா, சுனில் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. அவருக்கு மேலே இருந்து ஒரு அசரீரி குரல் கேட்கிறது. அந்த குரல் அவரது அசைவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இவ்வாறு தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து விலகி நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சிவகார்த்திகேயனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அந்த அசரீரி குரலாக விஜய் சேதுபது ஒலிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த சர்ப்ரைஸ் தகவலால் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

முதலில் இந்த குரலுக்காக கமல்ஹாசனைத்தான் சிவகார்த்திகேயன் அணுகினாராம். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. ஆனால் கமல்ஹாசனோ, “நீங்க நம்ம பேன்னர்ல நடிக்கிறதுங்குறது வேறு விஷயம். ஆனால் இதில் நான் குரல் கொடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம்” என்று வெளிப்படையாகவே கூறிவிட்டு நழுவிக்கொண்டாராம்.

- Advertisement -

அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோதுதான், மிஷ்கின் “விஜய் சேதுபதி பேசினால் எப்படி இருக்கும்?” என்று கேட்டாராம். அதன் பிறகுதான் விஜய் சேதுபதியை படக்குழுவினர் அணுகினார்களாம். இவ்வாறுதான் விஜய் சேதுபதி “மாவீரன்” படத்தில் அசரிரீக்கு குரல் கொடுக்க முன் வந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்