- Advertisement -
Homeபொழுதுபோக்குவந்த வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அந்த டைரக்டர் படத்தில் நடிச்சாலே...

வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறி தள்ளிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அந்த டைரக்டர் படத்தில் நடிச்சாலே போதுமாம் – முதல்ல நடிச்சதே பெருசா ரீச் ஆகலையேம்மா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் பெருமையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும். இந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பில்டப் செய்கிறார்கள். ஆனால் எல்லா இயக்குநர்களுமே திறமையானவர்கள்தான். எல்லா நடிகர்களுமே பிரபலமானவர்கள்தான்.

நடிகர் ரஜினிகாந்த் படங்களுக்கு வந்த அதே கூட்டம், நடிகர் ராமராஜன் நடித்த படங்களுக்கும் வந்திருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்கள் பிளாப் ஆன போது, மற்ற சின்ன இயக்குநர்கள், புதுமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அதனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பதுதான் தமிழ் சினிமாவின் நிலைமை.

- Advertisement -

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இளமையான அழகான நடிகையாக இருக்கிறார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில், பரிசல் ஓட்டும் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். அவரது நடிப்பும் சிறப்பாக தான் இருந்தது. ஆனால் படத்தில் நடித்த பல கேரக்டர்களில் ஒருவராக மட்டுமே அவர் பார்க்கப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக நிறைய வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. ஏனெனில் அவரது கேரக்டர் பெரிய அளவில் பொன்னியின் செல்வன் படத்தில் பேசப்படவில்லை.

இதற்கிடையே கட்டாகுஸ்தி படத்தில், விஷ்ணு விஷால் மனைவி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் கணவனுக்கு பயந்து நடக்கும் மனைவியாக நடிக்கும் அவரே, ஒரு கட்டத்தில் கணவனை கொல்ல வரும் வில்லன் ஆட்களை பந்தாடுவார். பிறகுதான் அவர் ஒரு கட்டா குஸ்தி வீராங்கணை என்பதே கதாநாயகனுக்கு தெரியும்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு 96 படத்தின் இயக்குநர் பிரேம் மனைவி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. படம் முழுவதும் கார் ஓட்டும் அந்த கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி மறுத்து விட்டார். அடுத்து, இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர். அந்த படத்துக்கும் நோ சொல்லி விட்டார். நடிகர் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார்.

இப்படி மூன்று முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தும், ஐஸ்வர்யா லட்சமி மறுக்க காரணம், இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா லட்சுமி கமிட் ஆகி உள்ளார். அந்த ஒரு படத்தில் ஒரு துக்கடா கேரக்டரில் நடிக்க, இப்படி 3 முக்கிய பட வாய்ப்புகளை மறுத்து இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தும் பெரிய வரவேற்பு இல்லை. பெரிய சம்பளமும் இருக்காது. இந்த 3 படங்களில் நடித்திருந்தால் நல்ல கணிசமான சம்பளமும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கும். இப்படி மணிரத்னத்தை நம்பி நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறாரே என்றுதான் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்