- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை விமர்சித்த சத்யராஜ் மகன் சிபிராஜ், அப்படீன்னா நீங்க, உங்க அப்பா எல்லாம் யாருங்க…?...

நடிகர் விஜயை விமர்சித்த சத்யராஜ் மகன் சிபிராஜ், அப்படீன்னா நீங்க, உங்க அப்பா எல்லாம் யாருங்க…? – ஆவேசமாக கேள்வி எழுப்பிய தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். கடந்தாண்டில் தனது அரசியல் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிக்கரமாக நடத்தினார். அப்போது குடும்ப அரசியல் நடத்தும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறி, என்னுடைய அரசியல் எதிரி திமுகதான் என்றும் அதிரடியாக பேசினார்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக அங்குள்ள 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ள 13 கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலைகளை, நீர்நிலைகளை கையகப்படுத்தும் அரசின் முயற்சிக்கு பாதிக்கப்படும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் விஜய் நேற்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, மக்களை அதிகம் பாதிக்காத இடத்தை தேர்வு செய்து விமான நிலையம் அமையுங்கள் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகன் நடிகர் சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரந்தூரில் நடிகர் விஜய் சென்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, பிலிம் ஆக்டர்/ கூத்தாடி என்று பதிவிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் தவெக கட்சியினர் தொண்டர்கள் மத்தியிலும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்யராஜ் நீண்டகாலமாக திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது மகள் திவ்யா சத்யராஜ், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இப்போது விஜயை கூத்தாடி என சிபிராஜ் விமர்சித்திருக்கிறார். விஜய் கூத்தாடின்னா உங்க அப்பா சத்யராஜ், நீங்க எல்லாம் யாருங்க என்று, ரசிகர்கள் தவெக தொண்டர்கள் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்