மாரி செல்வராஜ் தற்போது விக்ரம் மகன் துருவை வைத்து பைசன் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் பெயருக்கு கீழே காளமாடன் என எழுதப்பட்டுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் கணேசன் என்பவரின் வாழ்க்கையின் புனைவு கதைதான் இது என்று கூறப்படுகிறது.
ஆனால் இதனை மாரி செல்வராஜ் மறுத்தார். கபடி சார்ந்த விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எந்த படத்திலும் ஒப்புக் கொள்ளாமல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் விக்ரம் மகன் துருவ். கர்ணன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் துருவுடன் இணைவதாக தான் இருந்தது.
அந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என ஏராளமான ஒரு நடித்திருந்த இந்த திரைப்படம் ஹிட் அடித்தது.
இந்த படத்தை முடித்து ஒரு சிறிய இடைவேளை வாழைப் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள். நான்கு சிறுவர்களை மையப்படுத்தி இந்த படத்தை அவர் எடுத்திருக்கிறார்.
இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ஹிட் அடித்தன. வாழை திரைப்படம் தான் முதலில் எடுத்திருக்க வேண்டிய திரைப்படம் என்று சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் மாரி செல்வராஜ் கூறி இருந்தார்.
தனது இயக்குனர் ராம்மிடம் இது குறித்து பேசிய போது, தற்போதைக்கு வேறு படம் எடு என்று அவர் தெரிவித்ததால் பரியேறும் பெருமாள் இயக்கினேன் என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார். இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த கதை தான் இந்த வாழை திரைப்படம் என்று கூறப்படுகிறது. வரும் 23ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.





