- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ரொம்ப சுயநலவாதி, ரொம்ப பேராசை பிடிச்ச சுயநலவாதி - இப்படி வெளிப்படையா சொன்ன ஹீரோ...

நான் ரொம்ப சுயநலவாதி, ரொம்ப பேராசை பிடிச்ச சுயநலவாதி – இப்படி வெளிப்படையா சொன்ன ஹீரோ இவரா

- Advertisement -

நடிகர்கள், பெரும்பாலும் தங்களை பற்றி அடக்கமாக பொது இடங்களில் பேசுவார்கள். சில நடிகர்களின் குணம் வேறாக இருந்தாலும் விழா மேடைகளில், பொது இடங்களில், படப்பிடிப்பு தளங்களில், தங்களது இமேஜ் பாதிக்காத வகையில், மிகவும் கட்டுப்பாட்டுடன், கவனமாக நடந்துக்கொள்வர். அதுவும் மீடியா க்களின் வெளிச்சம் எந்நேரமும் அவர்கள் மீது இருப்பதால், பெரும்பாலும் அவர்கள் அப்படியே இருந்து பழகி விடுகின்றனர்..

ஆனால் இன்றைய தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மட்டுமே, பொதுவெளிகளில் எதையும் வெளிப்படையாக பேசுபவர்களாக இருக்கின்றனர். சில வேளைகளில், சினிமாவை கடந்து அரசியல், நாட்டு நடப்பு, சமூக பிரச்னைகள் குறித்தும் தங்களது அக்கறையை, கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். டிவிட்டர்களில் தங்களது கருத்துகளை, எண்ணங்களை பதிவிட்டு, தங்களது நிலையை மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த். ஜிகர்தண்டா, அருவம், வடசென்னை, உதயம் என்எச்4. அரண்மனை 2, தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருக்கிறார்.

இப்போது, சித்தா என்ற படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த குழந்தையின் சித்தப்பா கேரக்டரில் சித்தார்த் இந்த படத்தில் நடித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில், பழனிமலையில் உள்ள முருகனை தரிசனம் செய்துவிட்டு மலையை விட்டு கீழே வரும்போது நடத்தப்பட்ட நேர்காணலில் சில விஷயங்களை சித்தார்த் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

சித்தா படம், திரில்லிங்கான படம். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். படம் துவங்கியவுடன் ஸ்கீரினை பார்க்க துவங்கினால், படம் முடியும் வரை யாரும் கண்ணை சிமிட்ட மாட்டார்கள். அப்படி ஒரு படமாக இருக்கும். பழனிக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இங்குள்ள தெருக்களை, எங்களுக்காக தந்தார்கள். ஷூட்டிங் நடத்த வீடு தந்தார்கள். எங்களது படப்பிடிப்பால், பலரது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதற்காக, இந்த ஊருக்கு நன்றி சொல்கிறேன்.

நான் ரொம்பவும் சுயநலக்காரன். அதுவும் பேராசை பிடிச்ச சுயநலக்காரன். என்னுடன் நடிப்பவர்கள், மிகச்சிறந்த நடிகர்களாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அப்போதுதான், என்னுடைய நடிப்பு முழுமையானதாக, சிறப்பாக இருக்கும். நன்றாக நடனம் ஆடுபவர்களுடன் ஆடினால், நமது நடனமும் சிறப்பாக அமையும். அதுவே, ஆடத் தெரியாதவர்களுடன் ஆடினால், நம் நடனமும் எடுபடாமல் போகும். ஆனால், அந்த வகையில், இந்த படத்தில் நடித்த குழந்தை, எங்கள் நடிப்பாற்றலை எல்லாம் காணாமல் போகச் செய்துவிட்டது, என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் சித்தார்த்.

- Advertisement -

சற்று முன்