- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு எப்படி இருக்கணும் தெரியுமா? - திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்பு...

கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு எப்படி இருக்கணும் தெரியுமா? – திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்பு சொன்ன சூப்பர் விஷயம்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அப்பா டி ராஜேந்தரை போலவே சிலம்பரசனும் நடிப்பில், பாடுவதில், திரைக்கதை எழுதுவதில், இசையமைப்பதில், டைரக்‌ஷனில் படுசுட்டியாக இருப்பவர். ஆனால் நடிப்பில் முழு கவனம் செலுத்தாமல் சிம்பு இருப்பதால், அவர் எட்ட வேண்டிய உயரங்களை இன்னும் அடையாமல் இருக்கிறார்.

டி ராஜேந்தர்- உஷா தம்பதிக்கு சிலம்பரசன் மூத்த மகன். மற்றொரு மகன் குறளரசன், அவருக்கு திருமணமாகி சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. மகள் இலக்கியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் 41 வயது கடந்தும், இன்னும் சிலம்பரசன் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் நடிகர் சிலம்பரசன், வல்லவன் படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் காதல் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிரேக்கப் ஆகி விட்டது. பிறகு பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார்.

அதற்கு பிறகும், சில நடிகைகளுடன் காதல் வசப்பட்ட நடிகர் சிலம்பரசன், காதல் தோல்விகளால் பலத்த ஏமாற்றமடைந்தார். இப்போது 40 வயது கடந்தும் அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா விழாக்கள், பொதுநிகழ்ச்சிகளில் சிம்பு கலந்துக்கொள்ளும் பட்சத்தில் அவரிடம், உங்கள் திருமணம் எப்போது, என்று கேட்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சிம்புவே சலிப்படைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சிரிஷ் திருமண விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துக்கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் சிலம்பரசன், கல்யாணம் செய்துக்கொள்ளும் பெண்ணை, அந்த ஆண் ஒரு பெண்ணை அப்பா எப்படி கவனித்துக்கொள்வாரோ, அப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.

அதே போல், அந்த பெண்ணும் அவர் திருமணம் செய்துக்கொள்ளும் பையனை தனது தகப்பனை போல கவனித்து பார்த்துக்கெொண்டால் அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், என்று பேசியிருக்கிறார். முரட்டு சிங்கிளாக இருக்கும்போதே திருமண வாழ்க்கை குறித்து இவ்வளவு சிறப்பாக சிந்திக்கும் சிலம்பரசன், விரைவில் திருமணம் செய்துக்கொண்டால் நன்றாக இருக்கும், என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்