- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படப் பாடல்களில் விஜயை அட்டாக் செய்யும் வார்த்தைகள் வருகிறதா? புது பஞ்சாயத்தை...

குட் பேட் அக்லி படப் பாடல்களில் விஜயை அட்டாக் செய்யும் வார்த்தைகள் வருகிறதா? புது பஞ்சாயத்தை கிளப்பி விட்டுட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களை தான் போட்டியாளர்களாக ரசிகர்கள் கருதினர். ஆனால் அவர்கள் உடன்பிறவா சகோதரர்களை போல உண்மையில் இருந்தனர். பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் பெரிய நடிகர்களான போதும் ரசிகர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது.

ஆனால் அன்று முதல் இன்று வரை ரஜினியும் கமலும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் ரஜினியை விட்டுக்கொடுத்து கமலோ அல்லது கமலை விட்டுக்கொடுத்து ரஜினியோ பேசியது இல்லை. அந்தளவுக்கு ஒருவருக்கு ஒருவர் மரியாதையான நட்பில் உறவில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

அதே போல் இன்றைய தலைமுறை தமிழ் நடிகர்களில் அஜீத்குமாரும் விஜயும் கடும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். விஜயை தரக்குறைவாக கமெண்ட் செய்து அஜீத்குமார் ரசிகர்களும், அஜீத்குமாரை தாறுமாறாக விமர்சித்து விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் காரசாரமாக சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் விஜயும் அஜீத்குமாரும் இன்று வரை நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும் இப்போது அரசியல் ஆர்வம் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகி விட்டார். அதே போல் நடிகர் அஜீத்குமாரும் படங்களில் நடிப்பதை காட்டிலும் விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் 3 மாதங்களாக கலந்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது குட் பேட் அக்லி படத்தில் இருந்து 2 பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு பாடலில் கத்தி துப்பாக்கி என்ற வார்த்தைகளை குறிப்பிட்டு இருப்பதாகவும் அது நடிகர் விஜய் நடித்த படங்களின் டைட்டில் என்பதால் விஜய்க்கு எதிரான அவரை தாக்கும் விதமாக அந்த பாடல் வரிகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால் உண்மையில் இது சிலர் தவறான புரிதலில் கிளப்பி விடும் வதந்தி என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஒரு ஹீரோயிசம் நிறைந்த பாடலை எழுதும்போது ஆயுதங்களாக உள்ள துப்பாக்கி கத்தி போன்ற பெயர்களை கவிஞர்கள் குறிப்பிடுவது சாதாரணமான விஷயம். அதை வைத்து சர்ச்சையை கிளப்பக் கூடாது என்றும் சிலர் கமெண்ட் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்