தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிம்பு இருந்து வருகிறார். அவருக்கு மாநாடு படம் பெரிய கம்பேக் கொடுத்தது. வெந்து தணிந்தது காடு படமும் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் பத்துதல படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதே போல் தக்லைஃப் படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
தக்லைஃப் படத்தை தொடர்ந்த நடிகர் சிம்பு எஸ்டிஆர் 49 எஸ்டிஆர் 50 எஸ்டிஆர் 51 ஆகிய 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இதில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கி தலைமறைவாகி விட்டதால், அந்த படம் டிராப் ஆகி விட்டது. அதனால் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் எஸ்டிஆர் 49 என்று கூறப்பட்டது,
ஆனால் மணிரத்னம் தக்லைஃப் படத்தில் கதை திரைக்கதையில் செய்த சொதப்பலால் படம் பிளாப் ஆன நிலையில், மணிரத்னம் பெயரை கேட்டாலே தெறித்து ஓடும் மனநிலையில் இப்போது சிம்பு இருந்து வருகிறார். அதனால் எஸ்டிஆர் 49 படம் மணிரத்னம் இயக்கும் படமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு இனி நடிக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார்.
இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2ம் பாகமாக உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பது உறுதியாகி விட்டது. வருகிற ஜூலை 16ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகளில் இயக்குனர் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக டெஸ்க் லுக் ஷூட் சமீபத்தில் நடந்தது. இதில் வித்யாசமான புதிய கெட்டப்பில் சிம்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சூழலில் நடிகர் சிம்புவுக்கு சம்பள விஷயத்தில் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக்லைஃப் படத்தில் இணைந்து நடித்த சிம்பு, தக்லைஃப் படத்தை தனது திரை பயணத்தில் டர்னிங் பாயின்ட் படமாக கருதியிருக்கிறார். அதனால் இந்த படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
அதனால் தக்லைஃப் படத்தில் நடித்த போது கமிட் ஆன படங்களுக்கு, அட்வான்ஸ் மட்டுமே வாங்கிய சிம்பு தனது சம்பளம் இவ்வளவு என்று முடிவாக சொல்லவில்லை. தக்லைஃப் படத்துக்கு பிறகு சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கேட்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார். ஆனால் தக்லைஃப் படம் தந்த அபாரமான தோல்வி, வழக்கமான சம்பளத்தை கேட்டால் கூட இனி தயாரிப்பாளர்கள் தருவார்களா என்ற சந்தேகத்தை சிம்புவுக்கு ஏற்படுத்தி குழப்பமடைய செய்துள்ளது.





