தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான ஒரு கலைஞர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் தான். உண்மையில் அவர் ஒரு திரைப்படக் கலைஞனாக தொட்ட உச்சங்களும் செய்த சாதனைகளும் யாராலும் நெருங்க கூட முடியாதவை.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீது பல விமர்சனங்கள் அரசியல் பயணத்தில் அவர் குறித்த சர்ச்சைகள் பல இருந்தாலும் ஒரு திரைப்பட கலைஞனாக கமல் என்னும் மாபெரும் கலைஞனின் செய்த சாதனைகள் கொஞ்சநஞ்சம் அல்ல. பொதுவாகவே கமல்ஹாசன் திரைத்துறையில் நீண்ட நிறைய அனுபவங்களை பெற்றவர்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் ஒவ்வொரு நகர்விலும் அவரது பங்களிப்பும் உழைப்பும் திறமையும் பெரிய அளவில் உதவியிருக்கிறது. இப்போதும் கமல் என்னும் அந்த மகா கலைஞன் சினிமாவுக்கு செய்ய வேண்டிய பங்களிப்பு, கலைத்துறைக்கு மிகுந்த தேவையாக உள்ளது.
அதை உணர்ந்து தான் ஒரு நடிகராக தயாரிப்பாளராக இயக்குனராக கமல் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, தோனியை பத்தி சொல்வாங்க. எப்படி நீங்க இவ்வளவு கூலா இருக்கறீங்க? அவர் விளையாட்டை பற்றி நினைப்பவர். வெற்றியை பற்றி நினைப்பவர் அல்ல. பிரமாதமாக விளையாட வேண்டும் என்பதுதான் அது.
அப்படி நினைத்தோம் என்றால் நமக்கு பிரஷர் வராது. செஞ்சுரி வரும். அதுக்கு அப்புறம் இன்னொன்று. எதிரி என்ன செய்கிறான் என்றே கவனித்துக்கொண்டு இருந்தால் நாம தடுக்கி விழுந்து விடுவோம். பல பேர் எங்க சினிமா துறையிலேே அதை பண்ணுவாங்க.
ஏய் என்னய்யா அந்த படம் ஓடுதுங்கறாங்க. எப்படீ என்பதை யோசிக்கறதை விட்டுட்டு தான் என்ன செய்யணும் என்று யோசித்தாலே அவங்களுக்கும் வெற்றி வரும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.





