சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் வசதியான வீட்டு பெண்ணாக இருந்தாலும் சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை குடும்பம் பிள்ளைகள் பேறு போன்ற விஷயங்கள்தான் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களாக அமைகின்றன.
அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை நயன்தாரா கூட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்த நிலையில் அடுத்த சில மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் 2 ஆண் பிள்ளைகளுக்கு தாயானார். அந்த குழந்தைகளுக்கு உயிர் உலகம் எனவும் பெயர் வைத்து மகிழ்ந்தனர்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பத்மபிரியா. தமிழில் இயக்குனர் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து பொக்கிஷம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். மேலும் மிருதம் சத்தம் போடாதே வட்டாரம் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நாயகியாக நடித்து பிரபலமானவர்.
கடந்த 2014ம் ஆண்டில் பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 10 ஆண்டு காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த நடிகை பத்மபிரியா பிறகு கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். தற்போது தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பத்மபிரியா அந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் கர்ப்பமாக இருந்த தகவலையோ அல்லது தனக்கு குழந்தை பிறந்த செய்தியையோ வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த நடிகை பத்மபிரியா தற்போது தனக்கு குழந்தை பிறந்து குழந்தைக்கு ஒரு வயதான விஷயத்தை முதல் பிறந்த நாள் கொண்டாடிய பிறகு பொதுவெளியில் தெரிவித்து இருக்கிறார்.
எனினும் தனக்கு பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்பது குறித்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. குழந்தையின் பெயர் குறித்தும் அவர் குறிப்பிடவில்லை. மேலும் தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களையும் குழந்தை பிறந்த தகவலையும் உடனுக்குடன் தெரியும் தெரிவிக்கும் நடிகைகள் மத்தியில் பத்மபிரியா அதை பரமரகசியம் போல் காத்து குழந்தைக்கு ஒரு வயதான பிறகு இப்போது அதை பொதுவெளியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





