- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவருக்கு என்னதான் ஆச்சு? தக்லைப் படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு எடுத்துள்ள அதிரடி முடிவு, ரஜினிக்கு...

இவருக்கு என்னதான் ஆச்சு? தக்லைப் படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு எடுத்துள்ள அதிரடி முடிவு, ரஜினிக்கு போட்டியாக மாறுகிறாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் சிலம்பரசன், இயக்குனர் மற்றும் நடிகர் டிஆர் ராஜேந்தரின் மூத்த மகன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்பு, இன்று தமிழ் நடிகர்களின் முன்னணியில் இருக்கிறார். 41 வயதான நிலையில் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

அவரது தம்பி குறளரசன், தங்கை இலக்கியா ஆகியோருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகி விட்டது. முதலில் மாமா, பிறகு சித்தப்பா ஆகி விட்ட சிலம்பரசன் எப்போது திருமணம் செய்துக்கொண்டு அப்பா ஆக போகிறார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

- Advertisement -

நயன்தாரா, வரலட்சுமி, திரிஷா உள்ளிட்ட சிலருடன் காதல் வசப்பட்ட சிலம்பரசன், தொடர் தோல்விகளை சந்தித்தார். தனது காதல் வாழ்க்கை பிரேக்கப் ஆன பிறகு திருமணம் குறித்த ஆர்வத்தை தவிர்த்து விட்டார். இப்போதும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் செய்வது இல்லை.

வயதானவர்கள் இறந்து போகின்றனர். அதற்கான வயதானவர்களிடம் சென்று ஏன் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கேட்பது போல், என்னிடம் திருமணம் ஆகாதது பற்றி கேட்கிறார்கள் என்று ஒருமுறை திருமணம் குறித்த கேள்விக்கு கிண்டலாக பதில் சொல்லி இருந்தார் சிலம்பரசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது பெற்றோர் டி ராஜேந்தர் உஷா தம்பதி, சிம்புவுக்கு திருமணம் செய்துவைக்க தீவிரமாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வௌியீட்டு விழாவில் பங்கேற்ற சிலம்பரசன், ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் நம் உடம்புதான் நமக்கு முக்கியம். அதுதான் நம் கடைசி வரை உடன் வரப் போகிறது. அதனால் உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று அறிவுறுத்திப் பேசினார்.

இப்போது வருகிற செப்டம்பர் 22ம் தேதியுடன் தக்லைப் படப்பிடிப்பை நிறைவு செய்யும் நடிகர் சிலம்பரசன், அதற்கு பிறகு ஒரு மாதம் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இமயமலை மற்றும் அதை சுற்றியுள்ள ஆன்மிக தலங்களுக்கு சிலம்பரசன் தனியாக சென்று ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரான இவர், இந்த விஷயத்தில் தன் குருவாக அவரை பின்பற்றுகிறாரோ என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்