சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகருகிறது ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் தங்கலான். தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் விக்ரம், இந்தத் திரைப்படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். இந்த படத்தில் அவரது கெட்டப்பே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் சூழலில், விக்ரம் நீண்ட தாடி, கையில் தடி என மிரட்டலாக காட்சி இருக்கிறார். அதிலும் ரத்த காயங்களுடன் அவர் சண்டை போடுவது போன்று வெளியான காட்சி பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. பா ரஞ்சித்தின், நீலம் ப்ரொடக்சன் நிறுவனமும் இந்த படத்தின் தயாரிப்பில் பங்கெடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் நிகழ்த்தப்பட்ட அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.
அந்த சமயத்தில், இருந்த ஆங்கிலேயர் அடக்குமுறை மற்றும் சாதியை ஏற்றத்தாழ்வுகளை தான் அவர் கலைந்தெடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி 26 அதாவது குடியரசு தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிஜி பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ரிலீஸ் தேதி தள்ளிப் போய் தள்ளி போய் தற்போது சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக இது ரிலீசாக இருப்பதால் நாட்டின் முக்கியமான நகரங்களில், தங்கலான் திரைப்படம் குறித்த பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் விக்ரம் பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அத்திரைப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தங்கலான் திரைப்படம் குறித்து முன்பே யோசித்து வைத்திருந்த பா ரஞ்சித், கே ஜி எஃப் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இரண்டும் ஒரே ஜானர் தான் என எண்ணி அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டாராம். அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தனது கதைக்கும் அதற்கான கண்ணோட்டம் வேறு என்பதை உணர்ந்த ரஞ்சித் தங்கலானை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.





