- Advertisement -
Homeபொழுதுபோக்குநிச்சயமாக அந்த படத்தை நான்தான் டைரக்ட் செய்வேன், உறுதியாக சொன்ன நடிகர் சிலம்பரசன் - உற்சாகத்தில்...

நிச்சயமாக அந்த படத்தை நான்தான் டைரக்ட் செய்வேன், உறுதியாக சொன்ன நடிகர் சிலம்பரசன் – உற்சாகத்தில் எஸ்டிஆர் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என்று அழைக்கப்படுபவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர். அவரது மூத்த மகன் சிம்பு என்கிற சிலம்பரசன். எஸ்டிஆர் என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் சிம்பு நடித்திருக்கிறார். அப்போதே அவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சிம்பு, கடந்த 3ம் தேதியன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான 3 அறிவிப்புகளை வெளியிட்டார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என்ற முக்கிய அறிவிப்புகளை சிம்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

- Advertisement -

இதில் அவரது 50வது படத்தை சிம்புவே தனது சொந்த தயாரிப்பில் உருவாக்க இருக்கிற தகவலையும் தெரிவித்தார். தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்யும் இந்த படத்தை அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற சொந்த தயாரிப்பு பேனரில் சிம்புவே தயாரிக்க உள்ளதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இதுவரை சிம்புவின் அப்பா டி ராஜேந்தரின் தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்த பல படங்களில் சிம்பு நடித்திருக்கிறார். எனினும் இந்த முறை சிம்புவே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை முதலில் தயாரிக்க இருந்தது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான். ஆனால் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இந்த படத்தை தயாரிக்கவில்லை என்று கமல் விலகி கொண்டார். அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைப் படத்தில் தன்னுடன் நடிக்கும் முக்கிய வாய்ப்பை சிம்புவுக்கு கமல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நிச்சயமாக இந்த படம் சிம்புவுக்கு நல்ல இமேஜை தரும் படமாகவும் இருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் கமல் சிம்பு இருவரும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பதும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் என்பதும் இந்த எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள நடிகர் சிம்பு, நான் எனது 51வது படத்தை நானே டைரக்ட் செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த படத்தை தான் இப்போது அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். ஆனால் என்னுடைய 60வது படத்தை நான்தான் இயக்குவேன். அதற்காக எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை்பபடுகிறது. அதனால் என்னுடைய 60வது படத்தை நானே இயக்குவேன் என்று சிம்பு அதில் ரசிகரின் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்