- Advertisement -
Homeபொழுதுபோக்குஅலுவலகம் தேடி வந்த நடிகர் சிம்பு, கோபமாக நடந்துக்கொண்ட பிரபல தயாரிப்பாளர், பிரச்னையில் தலையிட்ட...

அலுவலகம் தேடி வந்த நடிகர் சிம்பு, கோபமாக நடந்துக்கொண்ட பிரபல தயாரிப்பாளர், பிரச்னையில் தலையிட்ட இரண்டு பிரபலங்கள் – உண்மையில் நடந்தது என்ன?

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். அதற்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு சம்பளம் பேசி சில கோடி ரூபாய் அட்வான்ஸ் ஆகவும் தந்தார். ஆனால் அந்த படத்தில் சிம்பு பிறகு நடிக்கவில்லை.

ஆனால் அதற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் தயாரிப்பாளருக்கு சிம்பு திருப்பி தரவில்லை. பலமுறை கேட்டுப்பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு நடிகர் சிம்புவும் பதில் அளித்த நிலையில் இருவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு இருவரும் சந்திக்காமல் பேசாமல் மறைமுக விரோதிகள் போல இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த பிரச்னையில் எப்படியாவது சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று திரைபிரபலங்கள் பலரும் இருவரையும் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு, எந்தவிதமான தகவலும் சொல்லாமல் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஐசரி கணேஷ் அலுவலகத்துக்கு திடீரென நேரில் சென்றிருக்கிறார்.

தனது அறைக்குள் வந்த நடிகர் சிம்புவை பார்த்த ஐசரி கணேஷ் திகைத்துப் போய் அவரை வரவேற்றுள்ளார். பிறகு அவர்கள் இருவரும் தனியறையில் ஒரு மணி நேரம் பேசிய நிலையில் நடிகர் சிம்பு இந்த விவகாரத்தில் ரூ. 5 கோடி வரை தர சம்மதித்துள்ளார். ஆனால் 12.5 கோடி ரூபாய் வரை என தர வேண்டும் ஏற்கனவே ஐசரி கணேஷ் கூறியிருந்த நிலையில் சிம்பு சொன்ன தொகைக்கு அவர் சம்மதிக்கவில்லை.

- Advertisement -

இதற்கிடையே சிம்புவுக்கு தெரியாமல் பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி தயாரிப்பாளர் தாணு இருவரும் ஏற்கனவே ஐசரி கணேஷை சந்தித்து இந்த விவகாரத்தில் 7.5 கோடிக்கு பஞ்சாயத்து பேசி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வந்துள்ளனர். ஏனெனில் சிம்புவும் ஐசரி கணேஷூம் இந்த பிரச்னையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது.

அதனால் சிம்புவிடம் கோபமாக பேசிய ஐசரி கணேஷ், ஏற்கனவே இந்த விஷயத்தில் 7.5 கோடி ரூபாய் தருவதாக தாணுவும் ஆர்கே செல்வமணியும் என்னிடம் பேசி விட்டனர். இப்போது நீங்கள் ஏன் என்னிடம் வந்து இப்படி பேசிக்கொண்டு இருக்கறீங்க? கிளம்புங்க. உங்களுக்கு இதில் சம்பந்தமில்லை. நான் அவர்களிடம் பணத்தை வாங்கி கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு எதுவும் பேச விரும்பாமல் சிம்பு அங்கிருந்து கிளம்பி வந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்