சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் தடபுடலாக நடந்த பிரமாண்ட திருமண விழா திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவாகும். அவரது மகளுக்கு நடந்த இந்த விழாவை மிக பிரமாண்டமான கொண்டாட்டமாக நடத்தி கோலிவுட் வட்டாரத்தையே அவர் அசந்துபோக செய்துவிட்டார் என்று தமிழ் சினிமா சார்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் வழங்கிய நிலையில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து விவிஐபிகள் கூட்டத்தில் திருமண விழா மண்டபமே திருவிழா கூட்டமாக மாறியிருந்தது.
ஐசரி கணேஷ் திருமண விழாவில் இரவு 7 மணியளவில் நடிகர் விஜய் கலந்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் மண்டபத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் நிறைந்திருந்த நிலையில் நடிகர் விஜய் அங்கு வந்து செல்வதால் பாதுகாப்பு சிரமங்கள், மற்றவர்களுக்கு ஏற்படும் அசௌகரியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடிகர் விஜய் திருமண விழாவில் பங்கேற்பதை கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார்.
ஆனால் புதுமண தம்பதியை ஒரு நாள் தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து விருந்து பரிமாறுவதாக நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் உறுதி அளித்திருக்கிறார். மிக விரைவில் அவர்களுக்கு தனது வீட்டில் விஜய் சூப்பரான விருந்து தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நடிகர் சிம்பு குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்புவின் வீட்டுக்கு திருமண அழைப்பிதழை தர நேரில் சென்றுள்ளார். அப்போது சிம்பு வீட்டில் இல்லாத நிலையில் அவரது அப்பா டி ராஜேந்தரிடம் அழைப்பிதழ் தந்து திருமண விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சிம்புவை போனில் அழைத்து அவர் விழாவுக்கு வருமாறு அழைக்கவில்லை.
எப்படியும் ஐசரி கணேஷ் தன்னை போனில் அழைத்து பேசுவார், நாம் திருமண விழாவுக்கு போகலாம் என்றுதான் விழாவுக்கு முந்தைய நாள் இரவு வரை நடிகர் சிம்பு காத்திருக்கிறார். ஆனால் திருமண கொண்டாட்ட ஏற்பாடுகளில் பிஸியாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதை செய்யவில்லை. கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில்தான், ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவுக்கு சிம்பு வரவே இல்லை என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





