- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தில் அந்த விஷயம் இருக்கப் போவது உறுதி... சஸ்பென்ஸை உடைத்த மறைந்த கட்சித் தலைவரின்...

கோட் படத்தில் அந்த விஷயம் இருக்கப் போவது உறுதி… சஸ்பென்ஸை உடைத்த மறைந்த கட்சித் தலைவரின் மனைவி…

- Advertisement -

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது விஜய்யின் கோட் திரைப்படம். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதை சுருக்கியே கோட் என்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

தற்போது ரஷ்ய நாட்டில் இறுதிக்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நீண்ட நாட்களாக திரையில் முகத்தை காட்டாமல் இருந்த, பிரசாந்த், லைலா, மைக் மோகன் ஆகியோர் கோட் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்கள்.

- Advertisement -

இது போக சினேகா, பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், வி டிவி கணேஷ், யோகி பாபு, அரவிந்த் ஆகாஷ், இவானா, யுகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

டைம் ட்ராவலை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்காக விஜய்யை இளமையான தோற்றத்தில் காட்ட, ஏ ஐ தொழில் நுட்பத்தை படக்குழு புகுத்தி இருக்கிறது. இதற்காக, வெங்கட் பிரபு விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் லண்டன் சென்று வந்தனர். தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.

- Advertisement -

கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் படத்திலிருந்து முதல் பாடலும் சமீபத்தில் வெளியானது. விஜய் குரலில் விசில் போடு என்னும் அந்த பாடல் இணையத்தில் 3 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த திரைப்படத்திற்காக, பல்வேறு புதுமைகளை வெங்கட் பிரபு புகுத்தி வருகிறார்.

அதன்படி மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்தை ஏ ஐ தொழில் நுட்பத்தில் கோர்ட் திரைப்படத்தில் வெங்கட் பிரபு காட்ட இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இதனை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உறுதிப்படுத்தி இருக்கிறார். இதற்காக வெங்கட் பிரபு தன்னிடம் பேசியதாகவும், விஜய்யும் தன்னை சந்தித்து இது குறித்து கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் இருந்திருந்தால் இதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொண்டிருப்பார் என்றும், தேர்தலுக்குப் பிறகு இது குறித்து பாசிட்டிவ்வான தகவலை படக்குழுவிடம் கூறியிருப்பதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்