- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்பவெல்லாம் இந்த மாதிரி படங்கள் வருவதே இல்லையே… தனுஷ் நடித்த இட்லி கடை… தமிழக முதல்வருக்கு...

இப்பவெல்லாம் இந்த மாதிரி படங்கள் வருவதே இல்லையே… தனுஷ் நடித்த இட்லி கடை… தமிழக முதல்வருக்கு பாஜக கட்சி வைத்த திடீர் கோரிக்கை!

- Advertisement -

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்த படத்தை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக கட்சி வலியுறுத்தியுள்ளது. வழக்கமாக சிறுவர்களுக்கான திரைப்படங்கள் வரிசையில் இட்லி கடை படத்தை பாஜக கொண்டு வந்திருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள படம் இட்லி கடை. இந்த தமிழ் திரைப்படம் நம்முடைய சமூகம் பண்பாடு கலாச்சாரத்தின் ஆணிவேராக உள்ளது. நேர்மறை எண்ணங்களை விதித்து கலைத்திறன் மிக்க படைப்பாக குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து வயதினரிடமும் அகிம்சையை போதிக்கும் அற்புதப் படைப்பாக உள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகளும் போதை கலாச்சாரமும் பாலியல் சுரண்டல்களும் ரத்தமும் துப்பாக்கி சத்தமும் அதிகரித்து மாணவர்களை இளைஞர்களை சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இட்லி கடை படம் மனிதநேயத்தை சொல்லித் தரும் வாழ்வியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

நவீன காலத்தை கருத்தில் கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளாமல் பழமை வாதத்தை புகழ்ந்து பேசுகிறது என்று இயந்திரத்தனமாக இட்லி கடை படத்தின் கருவை கருத்தை புரியாமல் தவறாக சிலர் பேசினாலும் படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவர் இளைஞர் ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை நீக்கி, தாய் தந்தை உறவின் புனிதம் குறித்தும் ஆன்மீக இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக இந்த படம் நம்மிடம் பதிய வைத்ததை மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

- Advertisement -

எனவே தமிழக அரசு நல்ல திரைப்படங்கள் எடுக்கப்படும் போது வரி விலக்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது. நல்ல தமிழ் படங்களுக்கு வரி விலக்கு அளித்து மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். யார் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள் என்பதை விட நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டால் அந்த படத்தை ஆதரிப்பது தமிழக அரசின் கடமை மக்களின் கடமை.

குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும் நாட்டுக்கு பெருமையும் சேர்க்கக்கூடிய அனைவருக்கும் நல்ல சிந்தனையை அளிக்கக்கூடிய அனைத்து தமிழ் திரைப்படங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வரி விலக்கு அளித்து பெருமைப்படுத்தி தமிழக மக்கள் காணும் வகையில் உற்சாகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இட்லி கடை படத்தை இலவசமாக காண தமிழக அரசு உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்