- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபுவுக்கு கூட நான் இந்த அட்வைஸ் எல்லாம் பண்ணலே, உனக்கு சொல்றேன் - நடிகர் பிரசாந்திடம்...

பிரபுவுக்கு கூட நான் இந்த அட்வைஸ் எல்லாம் பண்ணலே, உனக்கு சொல்றேன் – நடிகர் பிரசாந்திடம் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

- Advertisement -

ஒருமுறை நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை அழைத்துக்கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்குச் சென்றார். அப்போது பிரசாந்தை சிவாஜி கணேசன் வாழ்த்தியுள்ளார். அப்போது பிரசாந்திடம் சிவாஜி கணேசன் கூறியதாவது, நான் பிரபுவுக்குக்கூட இந்த அறிவுரைகளைச் சொன்னது கிடையாது. சினிமாவுக்கு வந்துவிட்டாய். முதலில் காலை 6 மணிக்குப் படப்பிடிப்பு என்றால் 5.30 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருக்க வேண்டும். இயக்குநரிடம் எதையும் கேள்வி கேட்காதே. அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு அதன்படி நடித்துக் கொடுத்தால் போதும். ஏன் அப்படி ஏன் இப்படி என்றெல்லாம் கேட்க வேண்டாம். எந்த நடிகையுடனும் அளவுக்கு அதிகமாக நெருங்கிப் பழகாதே என 3 அறிவுரைகளை பிரசாந்துக்கு கூறியிருக்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்.

சற்று முன்