நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படம் ஆன ஜப்பான் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த திரைப்படத்தின் திரைக்கதை வலுவாக எடுக்கப்படாதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படங்களை வெற்றி படங்களாக கொடுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது அவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஒன்று சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் வா வாத்தியாரே.
முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தீவிர எம்ஜிஆர் ரசிகராக காட்டி வருகிறார். கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். சத்யராஜுக்கு இதில் வில்லன் கதாபாத்திரமாம்.
சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரண்டு தரமான படங்களை கொடுத்த நலன் இந்த படத்தை இயக்கியிருப்பதால் அதன் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்திருக்கும் மெய்யழகன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 என்னும் திரைப்படத்தை எடுத்து காதலர்களை கட்டி போட்ட பிரேம்குமாரின் இரண்டாவது படமாக இது உருவாகி இருக்கிறது. தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இதுவும் 96 திரைப்படத்தைப் போன்று ஒரே நாள் இரவில் நடைபெறும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறதாம். கைதி படத்தைப் போன்றே இது இருக்கும் என்றும் ஆனால் அதில் இருந்த சண்டைக் காட்சிகள் இதில் வராது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான இடத்தில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஒவ்வொரு படத்திலிருந்து இருக்கிறதாம். இப்படி பல்வேறு விஷயங்கள் இந்த திரைப்படத்தில் நிறைந்திருக்க, வரும் 27ஆம் தேதி மெய்யழகன் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





