பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் நிதி சிக்கல் காரணமாக தள்ளிப் போனது. திடீரென இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் தலைவர் 173 ரஜினி படத்தை இயக்க கமிட் ஆகி விட்டார்.
அதனால் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நடிக்க தயாரானார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் சயின்ஸ்பிக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இந்த படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கும் தருவாயில் இருந்தது.
ஆனால் திடீரென இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சில மாதங்களுக்கு தள்ளி வைத்து விட்டார். அதற்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நடிக்க அவர் தயாராகி விட்டார். சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்கிழவி. இந்த படத்தை எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் வயதான மூதாட்டி கேரக்டரில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் தாய்கிழவி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றது. அதில் ராதிகாவின் நடிப்பும் கெட்டப்பும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த படம் நிச்சயமாக ராதிகாவுக்கு பல விருதுகளை பெற்றுத் தரும்.
இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் தாய்கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்து அசந்து போன அவர் இயக்குனர் சிவக்குமார் முருகேசனை நேரில் அழைத்து கட்டிப்பிடித்து பாராட்டியிருக்கிறார். மேலும் எனக்கு ஒரு கதை சொல்லுங்க என்றும் கேட்டிருக்கிறார்.
அவர் சொன்ன கதையை கேட்டு பிரமித்துப் போன நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை உடனே துவங்கி விடலாம். நானே எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மிகவும் அழுத்தமான ஒரு கேரக்டரில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார். குறுகிய கால படைப்பாக இந்த படம் உருவாகிறது. வரும் பிப்ரவரி மாதமே இந்த படப்பிடிப்பு துவங்குகிறது. இதனால்தான் வெங்கட்பிரபு படம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.





