- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலா பட வில்லனை காதலித்த கமல் பட நாயகி; கடைசியில் இந்த அவல நிலைக்கு அந்த...

காலா பட வில்லனை காதலித்த கமல் பட நாயகி; கடைசியில் இந்த அவல நிலைக்கு அந்த நடிகர்தான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மனிஷா கொய்ராலா, நேபாளம் நாட்டில் பிறந்த இவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். முதலில் நேபாளம் மொழி படத்தில் நடித்து பிறகு இந்தியில் பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக பாலிவுட் ஸ்டார் நடிகர்களான அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான், அக்சய் குமார் போன்றவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். இந்த சூழலில், அவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம். அவர் பம்பாய் என்ற படத்தில் மனிஷா கொய்ராலாவை அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

- Advertisement -

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கான் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் பான் இந்தியா படமாக அப்போதே பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இதில் சில பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் பெரிய அளவில் டிரண்டிங் ஆகின.

அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார். அதைத் தொடர்ந்து முதல்வன் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

- Advertisement -

அடுத்து ரஜினிக்கு ஜோடியாக பாபா படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா மீண்டும் இந்தி படங்களில் நடித்து வந்தார். அப்போது மனிஷா கொய்ராலா சில காதல் சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக நடிகர் நானா படேகர், (இவர் காலா படத்தில் வில்லனாக நடித்தவர்) மனிஷா கொய்ராலா காதலித்தனர். அக்னிசாட்சி என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் காதலை ஏற்பட்ட நிலையில் இருவரும் டேட்டிங் சென்றனர். இவர்களது காதல் குறித்து செய்திகள் வெளியான போது, நானா படேகர் அதை ஒத்துக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

இதைச் தொடர்ந்து சாம்ராஜ் டால்கா என்பவரை திருமணம் செய்து கொண்ட மனிஷா கொய்ராலா, இரண்டு ஆண்டுகளில் கணவரை பிரிந்தார். பிறகு குடிப் பழக்கம், புகைப்பழக்கத்திற்கு ஆளான நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இப்போது மனிஷா கொய்ராலா, தனது 53 வயதில் தனிமையில் இருக்கிறார். புற்றுநோய் விழிப்புணர்வு, சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

சற்று முன்