- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் பார்மூலாவுக்கு திடீரென மாறிய நடிகர் சிவகார்த்திகேயன், அந்த படத்துல வில்லனாக நடிக்கப் போறது அவரா?...

அஜீத்குமார் பார்மூலாவுக்கு திடீரென மாறிய நடிகர் சிவகார்த்திகேயன், அந்த படத்துல வில்லனாக நடிக்கப் போறது அவரா? – பெரிய சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாங்க போல…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தில் சாய்பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ராணுவ கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

அமரன் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் வைக்கவில்லை. சிங்கநடை என வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கன்னட நடிகை ருக்மணி வசந்த் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக இது உருவாவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து டாண் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடித்துக்கொண்டே, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.

அதாவது சூர்யா நடிக்க வேண்டிய புறநானூறு படத்தில்தான் சிவகார்த்திகேயன், தனது 25வது படமாக நடிக்கிறார். ஆனால் இந்த படத்துக்கான டைட்டில் வேறாக மாற்றப்பட உள்ளது. இந்த படத்திலும், சிபி சக்ரவர்த்தி இயக்கும் பாஸ் படத்திலும் மாறி மாறி நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

அதாவது 15 நாட்கள் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பாஸ் படத்தில் நடிக்கவும், அடுத்த 15 நாட்கள் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது எஸ்கே 25 படத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். அதன்படி 2 படங்களிலும் மாறி மாறி நடித்து படங்களை வெகு சீக்கிரமாக முடிக்க உள்ளார். இது நடிகர் அஜீத்குமாரின் பார்மூலா ஆகும். அவர்தான் சமீபத்தில் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களில் மாறி மாறி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டாண் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த போது அந்த படத்தில் வில்லனாக புரபசர் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார். இது பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அதே போல் இனி உருவாக உள்ள பாஸ் படத்திலும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவையே நடிக்க வைக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி திட்டமிட்ட நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்