கடந்த வாரம் ஞாயிறு அன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் பெரிய அளவில் நடந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் கூத்தாடி என்றால் அவ்வளவு இளக்காரமா என்று கேள்வி எழுப்பினார். கூத்தாடி தான் சத்தியத்தை பேசுவான் சாத்தியத்தை பேசுவான் உண்மையை பேசுவான் உரக்கப் பேசுவான் என்று ஆவேசமாக பேசினார்.
அப்போது தொடர்ந்து பேசிய விஜய், நான் நடிக்க வந்தபோது எனக்கு முகம் சரியில்லை, முடி சரியில்லை, உருவம் சரியில்லை, நிறம் சரியில்லை என்று பலரும் விமர்சித்தார்கள் என்று விஜய் வெளிப்படையாக பேசினார். அந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், கடுமையான உழைப்பால்தான் இந்த உயரத்தை அடைந்தேன் என்றும் ஆவேசமாக கூறினார்.
அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரையும் பலவிதங்களில் விமர்சித்தனர். ஒல்லிபிச்சான் நடிகர் என்று பலரும் அவரை கலாய்த்தனர். நாக்குப்பூச்சி நடிகர் என்றும் கிண்டலடித்தனர். ஆனால் அந்த உருவக் கேலியை எல்லாம் கடந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திறமையால், உழைப்பால் ஜொலித்து வருகிறார் நடிகர் தனுஷ் என்றால் அது மிகையல்ல.
நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆகிய பரிமாணங்களை கடந்து இப்போது நடிகர் தனுஷ் ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார். அவர் இயக்கிய ப பாண்டி, ராயன் ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போது இட்லிகடை என்ற படத்தையும் தனுஷ் டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் தனுஷ் இயக்கத்தில் உருவாகி, விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த படம் குபேரா. இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனாவும், நாகார்ஜுனா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்போது குபேரா படத்தின் டீசர் வெளியிடுவதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வருகிற நவம்பர் 15ம் தேதி அன்று குபேரா படத்தின் டீசர் வெளியாகும் என்று புதிய போஸ்டர் வெளியிட்டு, படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஏற்கனவே ராயன் படம் தந்த மிகப் பெரிய வெற்றியை தந்த நிலையில், குபேரா படம் டீசர் வரும் 15ம் தேதி வெளியாவது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





