- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன், வீடியோ வெளியிட்டு வாழ்த்துகள் சொன்ன...

இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன், வீடியோ வெளியிட்டு வாழ்த்துகள் சொன்ன இயக்குனர் சுதா கொங்கரா – கொல மாஸ் சாரே!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளில் முன்னணி டாப் ஸ்டாராக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் சம்பளமாக ரூ. 25 ஆயிரம் வாங்கிய நிலையில் இப்போது தனது 25வது படத்துக்கு ரூ. 75 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் அபரிமிதமான வளர்ச்சியை சினிமாவில் அவர் அடைந்திருக்கிறார்.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து 22வது படங்கள் வெளியாகி உள்ளன. இதில் அவரது 22வது படமாக கடந்தாண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் அமரன். ரூ. 325 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் 100வது நாள் விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது.

- Advertisement -

அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். அமரன் படம் போல இந்த படமும் பயோபிக் படம்தான். மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்ற கல்லூரி மாணவரின் வாழ்க்கை கதையை சுதா கொங்கரா படமாக்கி வருகிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா முக்கிய கேரக்டரில் அதர்வா மற்றும் வில்லன் கேரக்டரில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவர் இராசேந்திரன் என்பவரது வாழ்க்கை கதையில், இராசேந்திரன் கேரக்டரில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 1985ம் ஆண்டில் பிப்ரவரி 17ம் தேதி திருச்சியில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். இன்று அவர் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நண்பர்கள் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா, பராசக்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கல்லூரி மாணவர் தோற்றத்தில் ஸ்மார்ட் ஆக சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட அவர், சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DGKAnkYvi6c/?utm_source=ig_web_copy_link

- Advertisement -

சற்று முன்