தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. திருமணத்துக்கு பிறகு இடையில் ஆந்திராவில் அரசியல் களத்தில் குதித்த அவர் எம்எல்ஏ அமைச்சர் பதவிகளில் இருந்தார். இப்போது ஆந்திராவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததால் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான அன்பே டயானா படத்தில் நடிகை ரோஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நடிகர் சரத்குமாருடன் நான் சூரியன் என்ற படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு வயது 18 தான். ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அதே சரத்குமாருக்கு நான் அரசு படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறேன்.
அரசு படத்தில் பெரிய சரத்குமாருக்கு ஜோடியாக நானும் சின்ன சரத்குமாருக்கு சிம்ரனும் ஜோடியாக நடித்திருந்தோம். நான் சின்ன பொண்ணா சரத்குமாருக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். நான் ஏன் அவருக்கு அம்மாவா நடிக்கணும் என்று நினைக்கலாம் இல்லே? ஆனால் கதையை தான் நான் பார்த்தேன்.
கதாபாத்திரமாக தான் பார்த்து அந்த கேரக்டரில் நான் நடித்தேன். அப்புறம் காவலன் படத்தில் கதாநாயகி அசினுக்கு அம்மாவா நடிச்சிருக்கேன். ராஜ்கிரண் மனைவி விஜய்க்கு மாமியாரா நடிச்சிருந்தேன். தெலுங்குல சம்போ சிவ சம்போ படம் பண்ணியிருக்கேன். பூரி ஜெகநாத் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்.
கிருஷ்ணவம்சி சார் படம் பண்ணியிருக்கேன். அப்புறம் ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறதை ஸ்டாப் பண்ணினேன் என்றால் நீங்க இன்னும் ஹீரோயினா நடிக்கிற மாதிரி இளமையாக தானே இருக்கறீங்க? அப்புறம் ஏன் அம்மா கேரக்டர் பண்றீங்கன்னு திரும்ப திரும்ப என்கிட்ட கேட்கறாங்க.
உங்க முகம் இன்னும் அம்மா கேரக்டருக்கு மாறலே. உங்க தோற்றம் அப்படி இல்லை. உங்களை அம்மா கேரக்டர்ல ஏத்துக்க முடியலேன்னு ஓபனா சொல்றாங்க. தெலுங்குல இப்படி நேரடியாக லைவ் இண்டர்வ்யூ பேசும்போது ரசிகர்கள் கேள்வி கேட்கும்போது இதை சொன்னாங்க. ஹீரோயினுக்கு அக்கா மாதிரி இருந்துட்டு ஏன் அம்மா கேரக்டர் பண்றீங்கன்னு கேட்கறாங்க. அதனால் நான் அம்மா கேரக்டர்ல நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் நான் தொடர்ந்து அந்த கேரக்டர் பண்ணலே என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.





