- Advertisement -
Homeபொழுதுபோக்குசைக்கோ படத்துல நான் நடிக்கலே, அந்த ஒரு காரணத்துக்காக அந்த பட வாய்ப்பை நிராகரித்தேன் -...

சைக்கோ படத்துல நான் நடிக்கலே, அந்த ஒரு காரணத்துக்காக அந்த பட வாய்ப்பை நிராகரித்தேன் – நடிகர் யூகிசேது சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதற்கு முன்பு இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணி செய்தார். சித்திரம் பேசுதடி படம் மிஷ்கினுக்கு பெரிய வெற்றியை வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. குறிப்பாக வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டி தொட்டியெங்கும் அப்போது ஒலித்து டிரண்டிங் ஆனது.

அதன்பிறகு மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே முகமூடி துப்பறிவாளன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பிசாசு சைக்கோ உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. சவரக்கத்தி மாவீரன் லியோ டிராகன் வணங்கான் பரிமளா அண்ட் கோ என படங்களில் நடித்தும் மிஷ்கின் பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

- Advertisement -

இதில் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி நடித்த சைக்கோ என்ற படத்தை மிஷ்கின் டைரக்ட் செய்தார். 2020ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இதில் பார்வையற்றவராக உதயநிதி நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு கார் ஓட்டும் டிரைவராக நடிகர் சிங்கம் புலி நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்ற மிஷ்கினின் சிறந்த படைப்பாகும்.

தொடர்ந்து இப்போது தயாரிப்பாளர் தாணு தயாரிப்பாளர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் டிரெயின். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய நடிகர் யூகிசேது கூறியதாவது, சைக்கோ படத்தில் உதயநிதிக்கு டிரைவராக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். எனக்கு கார் ஓட்ட தெரியாததால் மறுத்துவிட்டேன். தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவெடுத்ததாக யூகிசேது அந்த விழாவில் கூறியிருக்கிறார்.

அதாவது தனக்கு கார் ஓட்டத் தெரியாத நிலையில் உதயநிதிக்கு கார் ஓட்டும் டிரைவர் கேரக்டரில் நான் நடிக்கவில்லை. தமிழ்நாட்டின் துணை முதல்வராக பின்னாளில் அவர் ஆன நிலையில், தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி அப்படி ஒரு முடிவை எடுத்ததாக நடிகர் யூகி சேது கூறியிருக்கிறார். இவர் விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.

- Advertisement -

சற்று முன்