- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை பத்தி யாரும் இங்கே பேசாதீங்க, அப்புறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது - ...

அவரை பத்தி யாரும் இங்கே பேசாதீங்க, அப்புறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது – ரியாலிடி ஷோவில் தேம்பி தேம்பி அழுத நடிகை ரோஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரோஜா. ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் பிரபுதேவா சரத்குமார் முரளி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக இருந்த ரோஜா இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் இப்போது குக் வித் கோமாளி 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடுவர்களாக செஃப் தாமு செஃப் கௌசிக் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் நடிகை ரோஜாவும் நடுவராக பங்கேற்று வருகிறார். குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவாக ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் நம்ம வீட்டு கல்யாணம் சுற்று இடம் பிடித்தது. அப்போது போட்டியாளர்கள் தங்கள் திருமண வாழ்க்கை அனுபவங்களையும் அதில் நடந்து நெகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அப்போது அரவிந்த் மற்றும் சங்கீதா தம்பதி பேசும்போது தங்களது வாழ்க்கை பற்றி கூறினர். அப்போது அரவிந்த் என் கல்யாணத்தில் என் அப்பா இல்லை என்று உருக்கமாக பேசினார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் புகழ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். என் கல்யாணத்திலும் அப்பா இல்லை என்று சொல்லி கண்கலங்கினார். உடனே அங்கிருந்தவர்கள், நடிகர் புகழை கட்டியணைத்து சமாதானம் செய்து கொண்டு இருந்தனர். இந்த உணர்ச்சியான தருணத்தை பார்த்து மனம் உடைந்து போன நடிகை ரோஜா, டேய் புகழ் அழாதடா நீ அழுவதை பார்த்தால் எனக்கும் அழுகை வருது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பிறகு ரோஜாவும் திடீரென தனது அப்பாவை நினைத்து அழத் தொடங்கி விட்டார். என் கல்யாணத்திலும் என் அப்பா இல்லை. அவர் எனக்கு உயிர். அப்பாவை பற்றி யார் பேசினாலும் எனக்கு கஷ்டமாக இருக்கும். யாரும் அப்பா பத்தி பேசாதீங்க என்று கூறி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

அவரின் இந்த உணர்ச்சி வெளிப்பாடு அங்கிருந்த மற்றவர்களை அமைதியாக்கி விட்டது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் அந்தப் பகுதி நொடிப்பொழுதில் உணர்வு ரீதியான ஒரு மன அழுத்தத்தில் மூழ்கியது. நடிகை ரோஜா தன் அப்பாவை நினைத்து மனம் கலங்கி அழுதது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரோஜா முதன் முறையாக இந்த ரியாலிடி ஷோவில் நடுவராக பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்