- Advertisement -
Homeபொழுதுபோக்குஆனந்த யாழை விழாவில் ஒரு நிமிடம் மட்டுமே பேசிய நடிகர் சிவக்குமார்… 10 லட்சம் ரூபாய்...

ஆனந்த யாழை விழாவில் ஒரு நிமிடம் மட்டுமே பேசிய நடிகர் சிவக்குமார்… 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கல் – அதுவும் எதுக்கு தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த பாடல் ஆசிரியராக கவிஞராக வலம் வந்தவர் நா முத்துக்குமார். பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பெரிய அளவில் ஹீரோக்களுக்கு புகழ் பெற்று தந்திருக்கின்றன. அதுவும் யுவன் சங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் தேனில் விழுந்த பலாச்சுளை போல தித்திக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கவிஞர் நா முத்துக்குமார் உடல் நலக்குறைவால் காலமாகி விட்டார். எனினும் அவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்துக்கொண்டு அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் ஆனந்த யாழை என்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சிவக்குமார் சத்யராஜ் கே பாக்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதே போல் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவின் மூலம் திரட்டிய நிதியை கொண்டு ரூ. 2.5 கோடி மதிப்பில் நா முத்துக்குமாரின் குடும்பத்துக்கு சொந்தமாக வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக மட்டுமே நடிகர் சிவகார்த்திகேயன், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்து வரும் பராசக்தி படப்பிடிப்பில் இருந்த அவர், சென்னைக்கு வந்து ஆனந்த யாழை விழாவில் கலந்துக்கொண்டு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கு சென்று பராசக்தி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு உள்ளார். ஆனால் சென்னையில் இருந்த பல நடிகர்கள் இந்த விழாவுக்கு வராமல் அலட்சியப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆனந்த யாழை விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார், விழா மேடையில் ஒரு நிமிடம் மட்டுமே பேசினார். வழக்கமாக சொற்பொழிவு போல மணிக்கணக்கில் உரை நிகழ்த்தும் நடிகர் சிவக்குமார், இந்த விழா மேடையில் ஒரு நிமிடம் மட்டுமே பேசக் காரணம், இது இசை விழா. விழாப் பேருரை ஆற்ற இடமல்ல என்று நடிகர் சிவக்குமாரிடம் விழா நிர்வாகிகள் வலியுறுத்தி சொன்னதால் ஒரு நிமிடம் மட்டுமே பேசி தனது சிறு உரையை நடிகர் சிவக்குமார் நிறைவு செய்திருக்கிறார்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் மேடையில் கவிஞர் நா முத்துக்குமாரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த தொகையை நா முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்கிய வீட்டின் இண்டீரியர் ஒர்க் பணிகளுக்காக இந்த நன்கொடையை செலவிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்